காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த M.M.அப்துல் அஜீஸ் என்ற ‘ஜாவியா அஜீஸ்’ 26-10-2016 புதன்கிழமை இன்று 7 மணியளவில் வபாசத்தாகி விட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் . அன்னாருக்கு வயது 72.
அன்னார், மர்ஹூம் எஸ்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அல்ஹாஃபிழ் நூ.கு.அபூபக்கர் அஜ்வாத் ஆலிம் அவர்களின் மருமகனாரும்,ஹாஜி எம்.எம்.முத்துவாப்பா, மர்ஹூம் எம்.எம்.ஜெய்னுத்தீன் மரைக்கார், எம்.எம்.முஹம்மத் உமர் ஆகியோரின் சகோதரரும்,
ஏ.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 17ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், ஏ.ஏ.செய்யித் உமர், ஏ.ஏ.ஹஸனா லெப்பை ஆகியோரின் தந்தையும், மர்ஹூம் ஹாஜி விளக்கு முஹம்மத் முஹ்யித்தீனின் மாமனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் 27.10.2016. வியாழக்கிழமை நாளை காலை 10.30 மணியளவில் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .
தகவல்: S.K. ஸாலிஹ்