காயல்பட்டிணம் சார்பில் பொது சிவில் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து முகாம்கள் கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் முதற்கட்டமாக 17/10/2016 அன்று மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 8 மணிவரை நடைபெற்றது.
திரளான சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் இந்த கையெழுத்து முகாமில் பங்கெடுத்தனர்.
முகாம்கள் நடைபெற்ற இடங்கள்:
1) கடற்கரை நுழைவு வாயில்.
2) ரிலா டிராவல்ஸ் பஜார் L.K.லெப்பை தம்பி சாலை.
3) அருசியாபள்ளி வளாகம்.
4) சகோ. யூனுஸ் பழைய இரும்பு வியாபாரம் இக்ரா அருகில்.
5) அஜித் டிராவல்ஸ் தாயிம்பள்ளி வணிகவளாகம்.
6) மீரான் பேக்ஸ் கீ.மு.கச்சேரி தெரு.
7) சதுக்கை சந்திப்பு அருகில்..
குறிப்பு:
கையெழுத்து முகாம்கள் இன்னும் பரவலாக நமது ஊரில் உள்ள மற்ற பகுதிகளில் / பெண்கள் கூடும் இடங்களில் நடத்துவதற்கு தன்னார்வளர்கள் வரவேற்கப்படுகின்றனர். விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள சகோதரர் சம்சுதீன் 9894861588, SDPI கட்சி – காயல்பட்டினம்.
SDPI இயக்கத்தினர் இச்செய்தியை நமக்கு அனுப்பித்த தந்த பின்னர், ஐக்கியப் பேரவையின் வேண்டுகோளை ஏற்று, அவர்கள் ஏற்பாடு செய்த சர்வக் கட்சி கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று , பேரவையின் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றனர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: SDPI Tuticorin