காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவையின் சார்பில் , 21-10-2016 அன்று பொது சிவில் சட்டத்தை அமல் படுத்தும் முயற்சிக்கு எதிராக அனைத்து ஜூம்ஆ பள்ளிகளில் கையெழுத்து வாங்கும் பணி சிறப்புடன் நடந்தேறியது .
இப்பணியில் காயல் நகர்மன்ற உறுப்பினர் E. சாமி அவர்களும் பங்குபெற்றார் என்பதும் , விடுதலை சிறுத்தை இயக்கத்தினர் நேரில் வந்து தங்களது ஆதரவை வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து தலைநகர் பேங்காங்கில் உள்ள பள்ளி ஒன்றில் காயலர் உள்ளிட்ட தமிழ் முஸ்லிம்கள் இதற்கான கையெழுத்து பணியில் ஈடுப்பட்டனர். இவை அனைத்தையும் இதன் கீழ் காட்சிப் படுத்தியுள்ளோம்.
காயல் ஜூம்ஆப் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம்
காயல் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு
பேங்காங் பள்ளியில் கையெழுத்து இயக்கம்
நிலைப்பட உதவி : சொளுக்கு A.J. முஹைதீன் அப்துல் காதிர்