காயல்பட்டினம் பைத்துல் மால் அறக்கட்டளையின் சார்பில், நமதூர் அரசு மருத்துவ அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க, மருத்துவமனை வளாகத்தில் புற நோயாளிகளின் பயன்பாட்டிற்கென சுமார் 65 ஆயிரம் செலவில் ஆண்கள் மற்றும் பெண்களின் பயன்பாட்டிற்கு, தனித்தனியாக கட்டப்பட்ட இரு கழிப்பறைகள் 15-10-2016 சனிக்கிழமை இன்று காலை 10.30 மணியளவில் பைத்துல்மால் அறங்காவலர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.
===================================================================================================================
சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவியில் முன்னுரிமை
காயல்பட்டினம் பைத்துல்மாலின் கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நமது ஊரில் இயங்கி வரும் சுய உதவிக்குழுக்களை தொழிலில் ஊக்குவிக்கும் பொருட்டு,
இம்மாதம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை விண்ணவிப்பிக்கும் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். மற்ற வகையான கடன் உதவிகளும் வழமை போன்று வழங்கப்படும் .
செப் 2016 உதவிகள் விபரம் :
கடன் உதவி பெற்றோர் எண்ணிக்கை 12 . தொகை ருபாய் 2 லட்சத்து 40 ஆயிரம் .
ஜகாத் உதவி பெற்றோர் எண்ணிக்கை 5. தொகை ரூபாய் 16 ஆயிரம் .