காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிலர், இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரவிக்குமார் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற வார்டுகளை சுழற்சி முறையில் பொது வார்டாகவும் , பெண்கள் வார்டாகவும் அமைத்து தரும்படியும், நீண்ட நாட்களாக சுழற்சி முறை நடை முறை படுத்த வில்லை என்றும் அக்கோரிக்கை மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
மேலும், தலைவர் பொறுப்புக்கு சுழற்றி முறை கடைபிடிக்க வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள குளறு படிகளை சரி செய்ய ஏற்பாடு செய்யும்படியும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
கோரிக்கை மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் இதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை ஐக்கியப் பேரவைக்கு வழங்கினார்.
மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்த இக்குழுவில், பேரவையின் தலைவர் அல்ஹாஜ் அபுல்ஹசன் கலாமி , செயலாளர் அல்ஹாஜ் வாவு சம்சுதீன் உள்ளிட்ட சுமார் 20 பேர் பங்கேற்றனர்.
அண்மையில் புதிதாக அமைக்கப்பெற்ற பேரவையின் நிர்வாகக் குழுவின் முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைப்படம் மற்றும் தகவல்: A.J. சொளுக்கு முஹைதீன் அப்துல் காதிர்