காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெரு அல்ஹாஜ் A.H. அமானுல்லாஹ் அவர்கள் , 12-10-2016 புதன்கிழமை இன்று மாலை 4 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார், தீவுத்தெரு மர்ஹூம் அபுல்ஹசன் ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம் அல்ஹாஜ் A.H. செய்யது அபூபக்கர் முத்து வாப்பா அவர்களின் சகோதரரும், அல்ஹாஜ் அல் பத்தாஹ் அபுல்ஹசன் அவர்களின் தகப்பனாரும் ஆவார்கள்.
மார்க்க அவைகளில் அரபி பாக்களை இனிமையான குரல் வளத்துடன் இசைப்பதில் சிறந்தவராக திகழ்ந்த மர்ஹூம் அவர்கள் , ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் முன்னாள் துணை இமாமாக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் இச்செய்தியில் இணைக்கப்படும்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக! ஆமீன் .