காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு கூட்டம் 14.09.2016 புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு பைத்துல்மால் அலுவலகத்தில் கூட்டப்பட்டது. முன்னாள் தலைவர் அறங்காவலர் ஹாஜி வாவு M.M. சம்சுதீன் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.


அல்ஹாஜ். டூட்டி M.S.L. சுஹரவர்த்தி அவர்கள், அல்ஹாஜ். S.A. ஜவாஹிர் B.Com., அவர்கள்,அல்ஹாஜ். பிரபு M.T ஹபீப் முஹம்மது அவர்கள், அல்ஹாஜ். M.A.S. செய்யது அபுதாஹிர் B.Sc., அவர்கள், அல்ஹாஜ் பாளையம் M.A. ஹபீப் முஹம்மது அவர்கள், அல்ஹாஜ். K.M. ஸலீம் B.Com., அவர்கள், அல்ஹாஜ். V.I. செய்யது முஹம்மது புஹாரி B.Com., அவர்கள், அல்ஹாஜ். M.A. ஜெய்னுல் குத்புதீன் அவர்கள், அல்ஹாஜ். A.H. நெய்னா சாகிப் B.Com., அவர்கள், அல்ஹாஜ். S.A.C முஹம்மது ஷhபி அவர்கள், அல்ஹாஜ். S.M. அஹமது சுலைமான் M.Com., அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஜனாப் K.அப்துர்ரஹ்மான் (ஜூவல்ஜங்ஷன்) குளம் அகமது முகைதீன் (ஜித்தா) M.S.L முகம்மது ஆதம் (ஜித்தா) M.A.K. அப்துல் ஹசீஃப் (ஜலாலியா) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
துவக்கமாக மர்ஹூம் வாவு K.S. முகம்மது நாஸர் BA., அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ‘துஆ’ ஓதப்பட்டது.


அடுத்ததாக காயல்பட்டணம் பைத்துல்மால் அறக்கட்டளையின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் நடைமுறைபடுத்த வேண்டிய திட்டங்கள் பல குறித்தும் நீண்ட கலந்தாலோசனைகள் நடைபெற்றது. பின்னர் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வருடத்திற்கு சுள.10000 வீதம் வழங்கும் கல்வி உதவித் திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (Arts and science) பயிலும் மாணவர்களையும் இத்திட்டத்தில் இணைத்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
25 வருடங்களை கடந்து வரும் பைத்துல்மாலுக்கு ‘வெள்ளி விழா’ மற்றும் ‘மலர் வெளியீட்டு விழா’ நடத்திட முடிவு செய்து விழா குழு அமைத்து செயல்பட முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஜனாப் முஹம்மது ஆதம் மற்றும் ஜனாப் M.A.K. ஹசீம் அவர்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.


ஜனாப் ஹாஜி ஜித்தா குளம் அஹமது முகைதீன் அவர்களை வெள்ளி மலர் விழாக் குழுவின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் அறங்காவலர் அல்ஹாஜ் பாளையம் M.A. ஹபீப் முஹம்மது அவர்களின் ‘துஆ’ வுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
நிலைப்படம் மற்றும் தகவல் : Mal Kbt
October 9th, 2016