காயல்பட்டனம் நகர் மன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் களம் காணும் வேட்பாளர்கள் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ முன்னிலையில் இன்று 01-10-2016 மதியம் 01:00 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், காயல்பட்டனம் நகர்மன்றத்தில் வார்டு எண் இரண்டு, மூன்று, நான்கு, ஏழு, எட்டு, பத்து ஆகிய வார்டுகளில் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சின்னமான ஏணி சின்னத்தில் களம் காணுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பி.மீராசா மரைகார், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹசன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஷ்காப், மாவட்ட துணைச் செயலாளர் பெத்தப்ப எம்.ஏ.சி.சுல்தான், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ், நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மது ஹசன் மற்றும் திமுக பொதுகுழு உறுப்பினர் சாகுல், திமுக நகர செயலாளர் ஜெய்னுத்தீன் ஆகியோர் தலைமையில்,
என்.டி.எஸ்.சாலிஹ் ஆலிம் மஹ்ழரி துவா பிராதனையோடு, YUF சங்கத்தில் இருந்து வேட்பாளர்கள் தீவுத்தெரு, கீழ சித்தன் தெரு, கீழ நெய்னா தெரு, மேல் நெய்னா தெரு, அம்பலமரைகார் தெரு, சதுக்கை தெரு வழியாக வேட்புமனு தாக்கல் செய்யும் நகராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக முஸ்லிம் லீக் தொண்டர்களும், கூட்டணி கட்சி தொண்டர்களும் மற்றும் திரளான பொது மக்களும் அழைத்து சென்றனர்.
பின்னர், 2-வது வார்டில் களம் காணும் சித்தி பவுசியா, 3- வது வார்டுடில் களம் காணும் கிதுரு பாத்திமா, 4-வது வார்டுடில் களம் காணும் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, 7-வது வார்டுடில் களம் காணும் ஜெய்னுல் குத்புத்தீன்,
8-வது வார்டுடில் களம் காணும் எஸ்.ஹெச்.முஹம்மது ஆமினா உம்மா ஆலிமா ஆகியோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் முன்னிலையில் மதியம் 01:00 மணியளவில் வேட்புமனு தாகல் செய்தனர்
உடன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட, நகர, வார்டு நிர்வாகிகளும் மற்றும் கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
குறிப்பு : 10 வது வார்டுக்கான வேட்பாளர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் வருகிற திங்கள் கிழமை வேட்புமனு தாகல் செய்கிறார். அவர் வேட்புமனு தாகல் செய்யவில்லை. 01-10-2016 அன்று மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் மாத்திரமே வேட்புமனு தாகல் செய்தனர்.