சௌதி அரேபியா நாட்டில் 12.09.2016 அன்று ஈதுல் அழ்ஹா – ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் ரியாத் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் காயலர்கள் உட்பட இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பெருநாள் தொழுகையை உற்சாகத்துடன் நிறைவேற்றினர்.













பெருநாள் விடுமுறையில் ரியாத் வந்திருந்த ஜித்தா மற்றும் அப்ஹா நகரங்களில் உள்ள காயலர்கள் ரியாத் நகரை சார்ந்த காயலர்களும் ஒருவருக்கொருவர் முகமன் கூறி உளமார பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு, வெகு நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் அவரவர் இல்லம் சென்று உணவருந்தி மகிழ்ந்தனர்.



அன்று மாலையில் உறவுகள் நட்புக்கள் இல்லம் சென்றும் பின்னர் பல்லாண்டுகாலமாக வாரவாரம் வெள்ளிமாலையில் வழமையாக ஒன்றுகூடும் நகரின் முக்கிய இடமான பத்தா எனும் பொது இடத்தில்சந்தித்து ஸலாம் கொடுத்து சந்தோசத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.
நிலைப்படம் மற்றும் தகவல் : ஜித்தாவிலிருந்து சட்னி ,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
September 30th, 2016