சௌதி அரேபியா நாட்டில் 12.09.2016 அன்று ஈதுல் அழ்ஹா – ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் ரியாத் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் காயலர்கள் உட்பட இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பெருநாள் தொழுகையை உற்சாகத்துடன் நிறைவேற்றினர்.
பெருநாள் விடுமுறையில் ரியாத் வந்திருந்த ஜித்தா மற்றும் அப்ஹா நகரங்களில் உள்ள காயலர்களுடன் ரியாத் நகரை சார்ந்த காயலர்களும் ஒன்றிணைந்து சௌதியின் பாரம்பரியமும் கலாச்சாரமும் மிகுந்த கசீம் மண்டலத்தின் இரட்டை நகர்களான புரைதா மற்றும் உனைஸா நகரங்களுக்கு இன்பச்சிற்றுலா சென்றனர்.
புரைதா நகரில் சொந்தமாக நிறுவனம் நடத்திவரும் முத்துச்சுடர் ,ஹாஜி என்.டி.ஜமால் அவர்களின் இல்லம் செல்லவும் அவர்களும் ,அவரது மகனும் , ஹாஜி,குளம் எம்.ஐ.மூஸா நெய்னா,இங்குள்ள கசீம் பல்கலை கழகத்தில் பல் மருத்துவத்துறை பேராசிரியர் மருத்துவர் சாளை எஸ்.முஹம்மது அப்துல் காதர் ரியாஸ் மற்றும் உனைஸா நகரிலிருந்து வந்திருந்த பாட்சி ஹாஜி பிரபு எம்.எஸ்.ஷாகுல் ஹமீது அவர்களும் வருகைதந்திருந்த காயல் சொந்தங்களை அகமகிழ வரவேற்றும் இரு நகரினையும் நன்கு சுற்றிகாட்டியும் மதியம் இரவு உணவும் அளித்து அன்புடன் கவனித்து கொண்டார்கள்.
மறுநாள் காலை அவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை பரிமாறியும் அங்கிருந்து புறப்பட்டும் மதியமளவில் இறையருளால் ரியாத் வந்தடைந்து கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்.
நிலைப்படம் மற்றும் தகவல் : ஜித்தாவிலிருந்து சட்னி ,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.