ஹாங்காங்கில் 12.09.2016. திங்கட்கிழமையன்று ஈதுல் அழ்ஹா – ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டின் கவ்லூன் பெரிய பள்ளிவாசலில், காலை 07.00 மணிக்குத் துவங்கி, ஒரு மணி நேர இடைவெளிகளுக்கிடையே 3 விடுத்தங்களாக பெருநாள் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்படுவது வழமை.
நடப்பாண்டும் 4 விடுத்தங்களாக நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. முதல் ஜமாஅத்தை பள்ளியின் துணை இமாம் – காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ,
இரண்டாவது ஜமாஅத்தை ஹாஃபிழ் முஹம்மத் நஈம், மூன்றாவது ஜமாஅத்தை – தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அர்ஷத், நான்காவது ஜமாஅத்தை காயல்பட்டினம் ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் வழிநடத்தினர்.
நிலைப்படம் : Irshad Ali
தகவல்: S.K. ஸாலிஹ்