ஹஜ் பெருநாள் 1437: ஐக்கிய அரபு அமீரகத்தில் நாட்டில் மற்றும் சவூதி ரியாத் காயலர் உடன் ஒன்றுகூடல்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நாட்டில் 12.09.2016 அன்று ஈதுல் அழ்ஹா – ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் பல்வேறு பள்ளிவாசல்களில் காயலர்கள் உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
தேராவிலுள்ள ஈத்கா மைதானத்தில் 12.09.2016 காலை 06.15 மணியளயவில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. காயலர்கள் உட்பட, ஆயிரக்கணக்கான பன்னாட்டு முஸ்லிம்கள் இத்தொழுகையில கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்ற பின்னர், ஒன்றுகூடிய காயலர்கள் சிலர், இணைந்தமர்ந்து பெருநாள் உணவுண்டனர். வந்திருந்தோர் ஒருவருக்கொருவர் முகமன் கூறி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு, வெகு நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் களைந்து சென்றனர்.
பின்பு அபுதாபி சேக் சாஹித் மஸ்ஜித் மற்றும் Ferrari வேர்ல்ட் ரியாத் காயலர்கள் உடன் பார்த்து மகிழ்ச்சியைப்பின்பு அபுதாபி காயலர்கள் பார்த்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். .