தாய்லாந்து நாட்டில் 12.09.2016 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள காயலர்கள், ஹஜ் பெருநாளை இன்பமுடன் கொண்டாடினர்.பெருநாளன்று காலை 09.15 மணிக்கு பாங்காக் மஸ்ஜிதில் ஹஜ் பெருநாள் தொழுகை கூட்டாக நடத்தப்பட்டது. ஆண்கள் – பெண்கள் என சுமார் 1,000 பேர் இத்தொழுகையில் பங்கேற்றனர்.
தொழுகை நிறைவுற்றதும் காயலர்கள் உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். பின்னர், காயலர்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க அங்கத்தினரும் இந்த ஒன்றுகூடலில் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நிலைப்படம் மற்றும் தகவல்: கம்பல்பக்ஷ் S.A.அஹ்மத் இர்ஃபான், பாங்காக், தாய்லாந்து