அமீரக காயல் நல மன்றத்தின் துணை தலைவருக்கு சவூதி தலை நகர் ரியாதில் உற்சாக வரவேற்பு !!
பணி நிமித்தம் சவூதி அரேபியா சென்றிருந்த அமீரக காயல் நல மன்ற துணை தலைவர் சாளை ஷேக் சலீம அவர்கள் தலைநகர் ரியாத்திற்கு சென்றிருந்த போது அங்கு வசிக்கும் காயலர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி அன்று , ரௌதா பூங்காவில் இரவு ஓன்று கூடலும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஜும்மா தொழுகைக்குப்பின் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் முஹம்மத் நூஹுஅவர்கள் தலைமையில் அவர்களின் இல்லத்தில் வைத்து கிட்டத்தட்ட 20 காயலர்கள் ஓன்று கூடி காயல் கலரி உண்டு மகிழ்ந்தனர் .
உணவிற்குப்பின் நகர் நலம் பற்றிய பொது விவாதங்கள் நடைபெற்றது. இந்த ஓன்று கூடலில் ரியாத் நகர மார்க்க அழைப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நமதூரை சார்ந்த அல்தாபி ஆலிம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் அன்று அசர் தொழுகைக்குப்பின் பத்ஹா என்ற இடத்தில் காயலர்கள் ஓன்று கூடி முகமன்கள் கூறி சந்தித்து மகிழ்ந்தனர்.
தனக்கு அளிக்கப்பட்ட இந்த கௌரவத்தை மிகவும் பெருமையாக கருதுவதாகவும் இந்த சந்திப்பை மிக குறுகிய சந்தர்ப்பத்தில் தனது இல்லத்தில் ஏற்ப்பாடு செய்து சிறப்பித்த ரியாத் காயல் நல மன்றத்தின் தலைவர் முஹம்மத் நூஹு அவர்களும் மற்றும் பொறுப்பாளர்களும் ஏனையவர்களும் தன மீது வைத்திருக்கும் மதிப்பிற்கும் அன்பிற்கும் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொண்டார்.