Home
Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat Kayalpatnam (also known as Kayalpattinam or Korkai) is a town in the Tuticorin district of Tamil Nadu, India. Kayal is referred to in Marco Polo's travel diaries dating to 1250 AD. Korkai or Kayal (Chayal) was an ancient port dating to the 1st centuries of the common era and was contemporaneous to the existence of Kollam, another Pandyan port. Kollam served the Pandyas on the west coast while Korkai/Kayal served them on the east coast connecting them to Ceylon and the pearl fisheries in the Gulf of Mannar facing the Tirunelveli Coast. Kayal has Muslim settlements dating from 7th century AD but Marco Polo's reference to the tomb of Thomas and the Christian communities would indicate Syrian Christian communities in the region prior to that era. The ancient port had connections with Egypt, Rome and Greece. The other ports on the Coromandel Coast were Kaveripumpattinam (Poompuhar) and Arikamedu (near Pondicherry). On the west coast the ancient ports were Kollam and Kodungallur and Barugachha (Broach) in Gujarat www.google.co.in
12:52 pm
Tuesday, 16 April 2024

காயல் இக்ராஃ பொதுக்குழுவில் நிர்வாகிகள் செயற்குழுவினர் தேர்வு



இக்ராஃ கல்விச் சங்க வருடாந்திர பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்வு!புதிய தலைமைப் பொறுப்பை ஏற்றது சிங்கை கா.ந.மன்றம்!!

 

இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிய தலைமைப் பொறுப்பை சிங்கப்பூர் காயல் நல மன்றம் ஏற்றுள்ளது.

 

கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள அறிக்கை:-

 

 

காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், 10.07.2016. ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.45 மணியளவில், கீழ நெய்னார் தெருவிலுள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது. இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி மக்கி நூஹுத்தம்பி, பேராசிரியர் கே.எம்.எஸ்.ஸதக் தம்பி, ஹாஜி எம்.எல்.சேக்னா லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

ரியாத் காயல் நல மன்றத்தைச் சேர்ந்த எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ரியாத் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் / நடப்பு ஆலோசனைக் குழு உறுப்பினரும் – இக்ராஃ கல்விச் சங்க துணைத்தலைவருமான ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்கு தாவூத் இத்ரீஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

 

கூட்ட அறிமுகம் & கூட்ட நடவடிக்கை ஒழுங்குகள் குறித்து, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.

 

 

இக்ராஃவின் கடந்த ஓராண்டு செயல்பாடுகளை உள்ளடக்கிய ஆண்டறிக்கையை, செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் சமர்ப்பித்ததுடன், உரை உள்ளடக்கம் குறித்த – பங்கேற்றோர் கேள்விகளுக்கு விளக்கமும் அளித்தார்.

 

 

 

இக்ராஃவின் கடந்த கால & அண்மைச் செயல்பாடுகள் குறித்து, நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் விளக்கிப் பேசியதுடன், உரை உள்ளடக்கம் குறித்த – பங்கேற்றோர் கேள்விகளுக்கு விளக்கமும் அளித்தார்.

 

இருவரது உரைகளின் உள்ளடக்கச் சுருக்கம் வருமாறு:-

 

>>> உலக காயல் நல மன்றங்கள், கல்வி ஆர்வலர்களின் உதவியுடன், கடந்த (2015-16) கல்வியாண்டில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த – பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 42 மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

B.Com., B.B.A., B.Sc(C.S.), B.C.A., B.Sc.(Hotel Management), Diploma in Mechanical Engineering ஆகிய படிப்புகளுக்காக 14 மாணவர்களுக்கும்,

 

B.A(English), B.B.A., B.Sc.(IT), B.Sc.(Food Science & Nutrition), B.Sc.(Maths), B.Com.& Aalima ஆகிய படிப்புகளுக்காக 28 மாணவியருக்கும் என மொத்தமாக இந்த 42 மாணவ-மாணவியருக்கும், 10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

இத்தொகையுடன், கல்லூரிகளில் இரண்டாமாண்டு – மூன்றாமாண்டு பயிலும் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையையும் சேர்த்து, மொத்தம் 8 லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் கல்வி உதவித்தொகையாக கடந்த 2015-16 கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ளது.

 

இவ்வகைக்காக 47 கல்வி ஆர்வலர்கள் அனுசரணையளித்துள்ளனர். (பட்டியல் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.)

 

>>> ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு (2015-16) பெறப்பட்ட ஜகாத் நிதி 2 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்.

 

இத்தொகையைக் கொண்டு, 24 மாணவர்களுக்கு B.E.(Mechanical, EEE, ECE, Civil), B.Tech.(IT), Automobile, Computer Networking, B.B.A., Chartered Accountant, ஆகிய படிப்புகளுக்காகவும்,

 

4 மாணவியருக்கு, B.Ed., B.Sc.(Nursing), B.P.T.(Physiotherapy), Diploma in Computer Science ஆகிய படிப்புகளுக்காகவும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

>>> பொது கல்வி உதவித்தொகை திட்டம், ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய இரு திட்டங்கள் மூலமாக, கடந்த 2015-16 கல்வியாண்டில் மட்டும் வழங்கப்பட்ட மொத்த கல்வி உதவித்தொகை 10 லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும்.

 

>>> இக்ராஃ துவங்கப்பட்ட காலம் தொட்டு, கடந்த 10 ஆண்டுகளாக 626 மாணவ – மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கல்வி உதவித்தொகை 79 லட்சத்து 86 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே – அல்ஹம்துலில்லாஹ்! (வருட வாரியாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட விபரப் பட்டியல் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அச்சுப் பிரதியாக சமர்ப்பிக்கப்பட்டது.)

 

>>> மகளிருக்கான கல்வி உதவித்தொகை வினியோகத்தைப் பொருத்த வரை, B.Ed.,Nursing படிப்புகளுக்கு முன்னுரிமையளித்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 

அதன்படி, கடந்த ஆண்டு பி.எட். பயின்ற மாணவி ஒருவருக்கு, இக்ராஃவின் ஜகாத் நிதியின் கீழ் ஒரு பகுதி தொகையும், காயல் நல மன்றங்களின் உதவிகளோடு மற்றொரு பகுதி தொகையும் என மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

 

அதற்கு முந்தைய வருடம் ஒரு மாணவிக்கு ரூபாய் நாற்பதாயிரம் ஒரு டிரஸ்ட் மூலம் அளிக்கப்பட்டு மீதம் தேவைப்பட்ட ரூபாய் 40 ஆயிரம் இக்ராஃ மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.திறமையான அந்த மாணவி பி.எட். பயின்று முடித்த உடனேயே நாமக்கல் நகரிலுள்ள ஒரு பள்ளியில் ரூபாய் 18,500/- மாத ஊதியத்தில் கணித ஆசிரியர் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நிகழாண்டில் ஒரு மாணவரின் பி.எட். முதலாமாண்டு படிப்புக்கென ரூபாய் 65,000/-

 

M.Sc. (Media and Communication) 2 ஆண்டு கல்விக்காக நிகழாண்டில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பயிலும் ஒரு மாணவருக்கு ரூபாய் 60,000/- என இரு மாணவர்களுக்கு, இக்ராஃ ஜகாத் கல்வி உதவித்தொகை மற்றும் சிங்கப்பூர், ரியாத், குவைத் காயல் நல மன்றங்களின் நிதிகளையும் பெற்று அவர்களுக்கான முழுக் கல்விச் செலவுகளையும் (Full scholarship) அளித்திட இக்ராஃ பொறுப்பேற்றுள்ளது.

 

>>> இக்ராஃவின் பொது கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டிற்கான (2016-17) கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு பிரசுரமாக அச்சிடப்பட்டு நகர் முழுக்க வினியோகிக்கப்பட்டு, அதனடிப்படையில் விண்ணப்பங்களும் வினியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, பரிசீலனையில் உள்ளது.

 

>>> இக்ராஃவின் பொது கல்வி உதவித்தொகை, ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகை ஆகிய திட்டங்களுக்காக இதுவரை அனுசரணையளித்துள்ள நன்கொடையாளர்களின் பெயர் பட்டியல் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

>>> OMEIAT நிறுவனம் உள்ளிட்ட – வெளியிடங்களிலிருந்து வழங்கப்படும் பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் அரசின் உதவித்தொகைகள் குறித்து, காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்குத் தேவையான தகவல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதோடு,

 

அதற்கான விண்ணப்பங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு இக்ராஃ அலுவலகத்தில் வினியோகிக்கப்படுகிறது .அதன் பயனாக, பல்வேறு நிறுவனங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய் கல்வி உதவித்தொகையாக மேற்படி மாணவ-மாணவியரால் பெறப்பட்டுள்ளது.

 

மேலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை குறித்து வழிகாட்டப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பில் ,நல்ல மதிப்பெண்கள் எடுத்த பல மாணவியருக்கு,

 

மவுலானா ஆஸாத் பவுண்டேஷன் – டெல்லி (மத்திய அரசின் – சிறுபான்மை சமுதாயத்திற்கான கல்வி உதவித்தொகை ) விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து வழங்கி அதனை பூர்த்தி செய்து அனுப்பிட வழிகாட்டப்பட்டு தற்போது பலருக்கும் கல்வி உதவித்தொகைக்கான காசோலை கிடைக்கப் பெற்றுள்ளனர். (இந்த திட்டத்தில் 11 ஆம் வகுப்புக்கு ரூபாய் 6000 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ரூபாய் 6000 வழங்கப்படுகிறது).

 

>>> இக்ராஃ கல்விச் சங்கத்தின் பரிந்துரையில் திருச்சியிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலச் சேரும் – தகுதியுள்ள 3 மாணவர்களுக்குத் தேவையான முழு கல்விச் செலவையும் அக்கல்லூரி நிர்வாகம் பொறுப்பெடுத்துக்கொள்வதாக முன்னரே அறிவித்திருந்தது.

 

இதுகுறித்து, காயல்பட்டினத்தின் மாணவர்களுக்கு – குறிப்பாக வேறு பல கல்லூரிகளில் பயில விண்ணப்பித்து, இக்ராஃவின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நன்கு எடுத்துக் கூறியும், இன்றளவும் அந்தச் சலுகையைப் பயன்படுத்திட ஒரு மாணவர் கூட ஆயத்தமாகவில்லை எனும் தகவல் இங்கு வருத்தத்துடன் சமர்ப்பிக்கப்படுகிறது.

 

>>> வழமை போல, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து, தொடர்ந்து பத்தாவது ஆண்டாக – கடந்த 05.09.2015. அன்று, காயல்பட்டினம் KSC மைதானத்தில் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

 

அன்று காலையில், மாநில சாதனை மாணவியருடன் – நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், மாலையில் – நிகழ்ச்சியை இணைந்து நடத்திய தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அனுசரணையில் மாநில சாதனை மாணவியருக்கும், உலக காயல் நல மன்றங்கள், கல்வி ஆர்வலர்களின் தாராள அனுசரணைகளைக் கொண்டு, உள்ளூர் சாதனை மாணவ-மாணவியருக்கும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அஸ்வின் கோட்னிஸ் IPS . சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இந்நிகழ்ச்சியை வெகுவாகப் பாராட்டிப் பேசியதுடன், மாணவ-மாணவியருக்கு உற்சாகமூட்டும் பயனுள்ள கருத்துக்களையும், பெற்றோர்களுக்கு அறிவுரை கூறியும் சிறப்புரை வழங்கினார்.

 

>>> அதே நிகழ்விடத்தில், மறுநாள் (06.09.2015. அன்று) காலையில், (ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட படி,) இக்ராஃ கல்விச் சங்கமும், காயல்பட்டினம் – சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பும் இணைந்து, “வெற்றியை நோக்கி…” எனும் தலைப்பில் கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு நிகழ்ச்சியை (Career Guidance Programme ) நடத்தின.

 

அதில், நமதூரின் அனைத்துப் பள்ளி (10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும்) மாணவ-மாணவியரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், பள்ளிக்கூடங்களுக்கே நேரடியாகச் சென்று, அழைப்புக் கடிதம் வழங்கி, நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவியரின் – பூர்த்தி செய்யப்பட்ட ஒப்புதல் படிவமும் பெறப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒப்புதல் தந்த மாணவ-மாணவியரின் மொத்த எண்ணிக்கை 1200 வுக்கும் மேல். ஆனால், நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோ வெறும் 200 மாணவ-மாணவியர் மட்டுமே! பங்கேற்றோரிலும் மாணவியரே அதிகம் (125). மாணவர்களின் வருகையோ (75) மிகவும் மோசமான நிலையிலிருந்தது.

 

வெளியூர்களில் படிக்கவும், வெளியூர் – வெளிநாடுகளில் பணியாற்றவும் செல்வோர் மாணவர்களே அதிகம் என்பதால், அவர்களின் வருகை அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகக் குறைவாக அவர்கள் வந்தது, இந்நிகழ்ச்சிக்காக நீண்ட நாட்களாகப் பாடுபட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவதாக ஒப்புதலளித்த 1200 மாணவ-மாணவியருக்குத் தேவையான சிற்றுண்டி – குளிர்பான ஏற்பாடுகள் அனைத்தையும் வீணாக்கி, ஏற்பாட்டாளர்களின் மனதையும் பெரிய அளவில் வேதனைப்படுத்திவிட்டது.

 

>>> அதே நாள் (06.09.2015. அன்று) மாலையில், அதே நிகழ்விடத்தில் – கத்தர் காயல் நல மன்றம் சார்பில், இக்ராஃ கல்விச் சங்கம் & தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, நகர பள்ளிகளுக்கிடையிலான பொது அறிவு வினாடி-வினா (Inter School Quiz Competition) நடத்தப்பட்டது.

 

காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் வென்றோருக்கு பரிசுகள், சான்றிதழ்கள், கோப்பைகள், நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

>>> கத்தர் காயல் நல மன்றம் சார்பில் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து ஆண்டுதோறும் – காயல்பட்டினம் நகரின் ஏழை மாணவ-மாணவியருக்காக வழங்கப்படும் பள்ளிச் சீருடை இலவச வினியோகத் திட்டத்தின் கீழ் கடந்த 2015-16 கல்வியாண்டில், 100 மாணவ-மாணவியருக்கு, தேர்ச்சி பெற்ற தையல்காரர்களைக் கொண்டு தனித்தனியே அளவெடுக்கப்பட்டு, 200 செட் பள்ளிச் சீருடைகள் தைத்து இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

 

>>> காயல்பட்டினம் நகர மாணவ-மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெறுவதற்காக, இக்ராஃ கல்விச் சங்கத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம், 12.12.2015. அன்று, காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவில், இக்ராஃ கல்விச் சங்க அலுவலகம் எதிரிலுள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடத்தப்பட்டது.

 

இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில், அதன் கல்வி நிகழ்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எம்.ஏ.புகாரீ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், இணைச் செயலர்களான என்.எஸ்.இ.மஹ்மூது, எஸ்.கே.ஸாலிஹ், பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், மூத்த செயற்குழு உறுப்பினர்களான பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, ஏ.கே.கலீல், எம்.ஏ.எஸ்.ஜரூக், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோரும்,

 

எல்.கே.மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, கவனமாகக் கருத்தில் கொள்ளத்தக்க பல ஆலோசனைகளை கூட்டத்தின்போது வழங்கினர்.

 

நகர மாணவ-மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்தல், ஆசிரியர்கள் – மாணவர்கள் – பெற்றோர் சந்திக்கும் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

 

இக்கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படையில், வருங்கால செயல்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக, மாணவ-மாணவியருக்குத் தனியாகவும், ஆசிரியர்களுக்குத் தனியாகவும், பெற்றோருக்குத் தனியாகவும் உளவள கலந்தாய்வு (கவுன்சிலிங்) நிகழ்ச்சிகளை நடத்திட திட்டமிடப்பட்டது.

 

அதன்படி, 09.01.2016. அன்று, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், அபூதபீ காயல் நல மன்றம் & இக்ராஃ கல்விச் சங்கம் ஆகியன இணைந்து,

 

“செதுக்கும் செம்மல்கள்” எனும் தலைப்பில் நகரின் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நிகழ்ச்சியைக் காலையிலும்,

 

“தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில், பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் நிகழ்ச்சியை அன்று மாலையிலும் நடத்தின.

 

இவ்விரு கருத்தரங்கங்களையும், புகழ்பெற்ற உளவள பயிற்சியாளரும், Life Improvement Mind Engineering – LIME அமைப்பின் நிறுவனருமான திரு. ஆர்.கணேஷ் திறம்பட நடத்தினார். இக்கருத்தரங்கங்கள் மிகுந்த பயனளிப்பதாய் இருந்ததாக பங்கேற்ற ஆசிரியர்களும், பெற்றோரும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

பத்திரிக்கைகளில் வெளியாகும் கல்வி மேம்பாட்டுத் தகவல்கள், கல்வி உதவித்தொகை தொடர்பான தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, மாணவ-மாணவியரின் கவனத்திற்கு எடுத்துச் சொல்லப்படுகிறது.

 

அதன்படி, “அரசுப் பொதுத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வதெப்படி?”, “வெற்றிக்கான மந்திரச் சாவி” ஆகிய தலைப்புகளில் ‘புதிய தலைமுறை’ பத்திரிக்கையில் வெளிவந்தவற்றை, இக்ராஃ கல்விச் சங்கத்தால் மறு அச்சிடப்பட்ட – 4 பக்கங்களைக் கொண்ட பிரசுரங்கள் நகரின் அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும்,

 

காயல்பட்டினம் – ஆறுமுகநேரி (கே.ஏ.)மேனிலைப்பள்ளிக்கும் நேரடியாகச் சென்று, 10ஆம் – 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணிவியருக்கு பொதுத் தேர்வுகள் துவங்குவதற்கு முன்பு வினியோகிக்கப்பட்டுள்ளன.

 

மிகப் பொருத்தமான நேரத்தில் இப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளதாவும், அவை நிச்சயம் மிகுந்த பயனளிக்கக் கூடியவை என்றும் – பிரசுரங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

>>> வெளியூர் – வெளிநாடுகளில் தம் படிப்புக்கேற்ற தரமான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி மிகவும் அவசியம். இதைக் கருத்திற்கொண்டு, தம்மாம் காயல் நல மன்றம் & இக்ராஃ கல்விச் சங்கம் ஆகியன இணைந்து, கடந்த கோடை விடுமுறையின்போது,

 

மே 05 முதல் 30ஆம் நாள் வரை, “2016 Summer Spoken English Coaching Programme” எனும் தலைப்பில், ஆங்கில பேச்சுப் பயிற்சி தொடர் வகுப்புகள் மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவியருக்குத் தனியாகவும் நடத்தப்பட்டுள்ளன. இதில், 22 மாணவர்களும், 12 மாணவியரும் பங்கேற்றுப் பயன்பெற்றுள்ளனர்.

 

இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் கோடை விடுமுறையின்போது நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. (சென்ற வருடத்திற்கு முந்தைய வருடம் இதே போன்ற கோடைகால ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி நடத்தப்பட்டது.அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் கலந்து பயன் பெற்றது இங்கே நினைவு கூறத்தக்கது).

 

>>> அரசுத் துறை சார்ந்த உயர் பதவிகளைப் பெற்றிடத் தேவையான I.A.S., I.P.S., I.F.S., TNPSC உள்ளிட்ட படிப்புகள் மீது மாணவர்களுக்கு ஆர்வமூட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது தொடர்பான அமைப்புகளையும், நிபுணர்களையும் தொடர்புகொண்டு, பொருத்தமான நேரங்களில் விழிப்புணர்வு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

 

அதுபோல, இன்ஷாஅல்லாஹ் விரைவில் துவக்கப்படவுள்ள இக்ராஃவின் சொந்தக் கட்டிடத்தில், TNPSC படிப்புக்கான வழிகாட்டு ஆலோசனைகளை வழங்குதவற்காக என தனிப் பிரிவும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

>>> ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில், Primary School Welfare Project – துவக்கப்பள்ளி மேம்பாட்டுத் திட்டம் எனும் பெயரில் திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதன்படி, காயல்பட்டினம் ஓடக்கரை, மங்களவாடி (தேங்காய்பண்டக சாலை), அருணாச்சலபுரம், அலியார் தெரு, சிவன்கோயில் தெரு, ரத்தினபுரி உள்ளிட்ட அகநகர் – புறநகர்களிலுள்ள துவக்கப்பள்ளிகளுக்குத் தேவையான சுற்றுச் சுவர், தண்ணீர் மோட்டார் பம்ப்செட், வாட்டர் ஃபில்டர், மின் விசிறிகள், பெஞ்ச், டெஸ்க், டிவி, டிவிடி –

 

ஆசிரியர்களுக்கு தேவையான சேர் உள்ளிட்ட உதவிகள் நிறைவாக செய்துகொடுக்கப்பட்டுள்ளது. மாணவ- மாணவியருக்குத் தேவையான பள்ளிச் சீருடைகள், காலணிகள்,பாட நோட்டுகள், உணவருந்துவதற்கான ஸ்டீல் தட்டுகள், டம்ளர்கள் ஆகியவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

 

இது தவிர சமீபத்தில் கத்தர் காயல் நல மன்றம் சார்பில், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் ஏழை-எளிய மாணவியருக்குத் தேவையான பாடக் குறிப்பேடுகளும், இதர வகுப்பறை பயன்பாட்டுப் பொருட்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

 

அதே அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து பயன்றுக் கிடந்த வகுப்பறையை தம்மாம் காயல் நல மன்றத்தின் பொருளுதவியுடன் சரிசெய்யப்பட்டு தற்போது அந்த அறையில் வகுப்பு நடை பெற்று வருகிறது.

 

இக்ராஃவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வரும் இந்த பள்ளிகளுக்கான நலத்திட்டத்தில் ரியாத் காயல் நல மன்றம், ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம், கத்தார் காயல் நல மன்றம், தம்மாம் காயல் நல மன்றம் ஆகிய நான்கு மன்றங்களாலும் மற்றும் சகோதரர் கூஸ் SAT முஹம்மது அபூபக்கர் மற்றும் அவர்களது நண்பர்கள் இணைந்தும் இது வரை 3,41,000/- ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

>>> இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு சொந்த அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் தேவைப்படும் சிற்சிறு மாற்றங்களுக்குப் பின் பணி துவக்கப்படும்.

 

>>> இக்ராஃ கல்விச் சங்கத்தின் – கடந்த (2014-15) ஆண்டுக்கான கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை (Auditor Report ) பெற்று சமர்ப்பிக்கப்பட்டு, சங்கப் பதிவுச் சட்டத்தின் (Society Registration Act) கீழ் அரசுப் பதிவைப் புதுப்பிக்கும் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

 

அடுத்து தலைமையாசிரியர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டபடி, நமதூரின் அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குமான வழிகாட்டு நிகழ்ச்சி மற்றும் மாணவ- மாணவியருக்கான கவுன்சிலிங் நிகழ்ச்சியும் கூடிய விரைவில் நடத்திட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 

அத்துடன் அரசுப்பணிகளின் பக்கம் நமது மக்களை கவனம் செலுத்திடச்செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் / முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது,இன்ஷா அல்லாஹ்!

 

இவ்வாறாக, இக்ராஃவின் கடந்த கால செயல்பாடுகள், ஆண்டறிக்கை ஆகியன – செயலர், நிர்வாகி ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளிலுள்ள அம்சங்கள் சில குறித்து – பங்கேற்றோரில் சிலரால் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கும் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து 2015-16 வருடத்திற்கான வரவு -செலவு கணக்கறிக்கை மற்றும் 2016-17 வருடத்திற்கான பட்ஜெட்டை இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் தாக்கல் செய்தார். (2015-16 வருடத்திற்கான வரவு -செலவு கணக்கறிக்கை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் முற்கூட்டியே வழங்கப்பட்டது).

 

அதில் நிர்வாகச் செலவுகளுக்கு ஏற்படும் நிதி பற்றாக குறை குறித்து தெரிவிக்கப்பட்டது. அத்தொகையை அந்தக் கூட்டத்திலேயே பலராலும் வாக்களிக்கப் பட்டு நிவர்த்தி செய்யப்பட்டது.

 

தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப் பரிமாற நேரம் ஒதுக்கப்பட்டது. முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் / கேள்விகள் & அவற்றுக்கு வழங்கப்பட்ட விளக்கங்கள் வருமாறு:-

 

>>> கருத்து:

 

ஆண்டுதோறும் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் நிலையைத் தவிர்த்திட, முற்கூட்டியே Forecast Budget அறிவிக்கலாம். (ஏ.எம்.செய்யித் அஹ்மத் – ஜித்தா காயல் நல மன்றம் சார்பாக… & மக்கீ நூஹுத்தம்பி)

 

விளக்கம்:

 

அவ்வாறு ஆண்டுதோறும் நிதிநிலையறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. என்றாலும், இக்ராஃ வருடாந்திர செலவினங்களுக்காக நிரந்தர வருமானமாக முழுத்தொகையும் பெறப்படாததாலேயே இப்பற்றாக்குறை கணக்கில் வருகிறது.

 

எனினும், இதுபோன்ற வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது பற்றாக்குறை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, விருப்பமுள்ளவர்கள் இதில் ஒத்துழைக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன்படி, கூட்டத்தில் பங்கேற்போர் ஆர்வமுடன் தரும் தொகையைக் கொண்டு பற்றாக்குறை சரிசெய்யப்படுகிறது.

 

ஆண்டுதோறும் நிரந்தர நிதியாதாரம் தேவைக்கேற்ப முழுமையாகப் பெறப்பட்டால், இப்பற்றாக்குறை ஏற்படாது.

 

>>> கருத்து:

 

ஜகாத் நிதி மொத்தக் கூட்டல் கணக்கிலுள்ள சந்தேகங்கள் குறித்து, தம்மாம் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் கேட்ட கேள்விக்கு கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

 

>>> கருத்து:

 

இக்ராஃ தலைமைப் பொறுப்பிற்கு இதில் அங்கம் வகிக்கும் காயல் நல மன்றங்களின் தலைவரை தேர்ந்தெடுப்பதுதானே வழக்கம். தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே. தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கான வரையறை என்ன? (கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. – செயற்குழு உறுப்பினர், இக்ராஃ கல்விச் சங்கம்)

 

விளக்கம்:

 

இக்ராஃவின் சுழற்சி முறை நிர்வாகத்தின் கீழ் இதுவரை பங்கேற்றுள்ள 6 காயல் நல மன்றங்களிலிருந்தும், ஒரு மன்றத்தின் தலைவர் இக்ராஃவின் தலைவராகவும், இதர மன்றங்களின் தலைவர்கள் இக்ராஃவின் துணைத்தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுவது வழமை.

 

அதன் படி, ஆண்டுக்கு ஒருவர் வீதம் ஒரு சுற்று தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சேவையாற்றியுள்ளனர்.

 

நடப்பாண்டில், இரண்டாவது சுற்று துவங்குகிறது. சிங்கப்பூர் காயல் நல மன்றம் தலைமைப் பொறுப்பை ஏற்கிறது. அம்மன்றத்தின் நடப்பு தலைவர், ஷிஃபா அமைப்பில் தான் கவனம் செலுத்துவதாலும், சில personal commitment காரணமாகவும், தம் மன்றத்தின் துணைத்தலைவரான மகுதூம் முஹம்மது அவர்களை இக்ராஃவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என தம் மன்றத்தின் சார்பாகத் தெரிவித்துள்ளார். அது பரிசீலிக்கப்பட்டு, தற்போது இக்கூட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

 

எனினும், ஒவ்வொரு பொறுப்புக் காலத்திலும், அந்தந்த மன்றங்களின் தலைவர்களே இக்ராஃவின் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், ஒருவேளை இதுபோன்ற நெருக்கடியான நேரங்களில் – தொடர்புடைய மன்றம் கேட்டுக்கொள்ளுமானால், அவர்களின் வேண்டுகோள் படி அவர்கள் குறிப்பிடும் நபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் இக்கூட்டத்தில் விவாதித்ததன் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.

 

தற்போது புதிதாக காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பும் சுழற்சிமுறை நிர்வாகத்தில் இணைந்துள்ளதால், அதன் தலைவரும் துணைத்தலைவர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

 

 

>>> கருத்து:

 

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்துவது வரவேற்கத்தக்கது. அதன்படி, நகரின் அனைத்துப் பள்ளிகளுக்கிடையில் விளையாட்டு, சமூக அக்கறை சார்ந்த கலை நிகழ்ச்சிகள், போட்டிகளை நடத்துவதன் மூலம், அவர்களுக்குக் கல்வியின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்த இயலும். மேலும் வரும் காலங்களில் நமது மாணவர்களை சட்டப் படிப்புக்கும் (Law), பத்திரிக்கைத் துறை சார்ந்த படிப்புக்கும் ஊக்குவிக்க வேண்டும். (எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் – அறங்காவலர், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட்)

 

விளக்கம்:

 

இக்கருத்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

 

கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தலாமா? என்பது குறித்த கலந்தாலோசனை நடைபெற்றது.பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.எனினும் இதன் சாதக ,பாதகங்கள் பற்றி செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று கருத்து கூறப்பட்டது.

 

>>> கருத்து:

 

கடன் அடிப்படையில் கல்வி உதவித்தொகைக்காக காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையை அணுகலாம்… (எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர், தலைவர் – ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் – ஜக்வா)

 

கடன் அடிப்படையில் கல்வி உதவித்தொகைக்காக ஜன்சேவா அமைப்பை அணுகலாம்… (எல்.டீ.செய்யித் ஸித்தீக், நிர்வாகக் குழு உறுப்பினர் – ஜன்சேவா)

 

விளக்கம்:

 

இவ்வறிவிப்புகளுக்கு நன்றி. இனி வருங்காலங்களில், தகுதியுடைய மாணவர்களை இக்ராஃ நேர்காணல் செய்து, மேற்படி உதவிகளைப் பெற்றிட வழிகாட்டும்.

 

>>> கருத்து:

 

துவக்கப்பள்ளிகளுக்கு உதவுவதைப் போல, துளிர் பள்ளிக்கும் உதவலாமே…? (எம்.எல்.ஷேக்னா லெப்பை, செயலாளர் – துளிர் அறக்கட்டளை)

 

விளக்கம்:

 

துளிர் பள்ளிக்கு என்ன பொருட்கள் தேவை என முறைப்படி தெரிவித்தால் பரிசீலிக்கப்படும்.

 

 

>>> கருத்து:

 

இக்ராஃவில் கல்வி உதவித்தொகையை இதுவரை பெற்றவர்களின் நடப்பு நிலை குறித்து விசாரித்து, அவர்கள் நன்னிலையிலிருப்பின், அவர்களிடமிருந்தும் கல்வி உதவித்தொகைக்கு அனுசரணை பெற முயற்சிக்கலாமே…? (டாக்டர் ஏ.முஹம்மத் இத்ரீஸ், முன்னாள் தலைவர் ,இக்ராஃ)

 

விளக்கம்:

 

அதற்கான செயல்திட்டம் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டு, கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ-மாணவியருக்கு கடிதம் கூடிய விரைவில் அனுப்பப் படவுள்ளது.

 

>>> கருத்து:

 

வழமைக்கு மாற்றமாக, கடந்த கல்வியாண்டில் ஒரு பள்ளியில் மட்டும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 35 பேர் தேர்ச்சியிழந்துள்ளது குறித்து ஆராயப்பட வேண்டும். (ஏ.எம்.செய்யித் அஹ்மத், செயற்குழு உறுப்பினர் – ஜித்தா காயல் நல மன்றம்)

 

விளக்கம்:

 

அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  இவ்வாறாக கருத்துப் பரிமாற்றங்களும், அவற்றுக்கான விளக்கங்களும் அமைந்திருந்தன.

 

 

இக்ராஃவின் புதிய கட்டிடப் பணிக்காக, இதுவரை அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த கத்தர் காயல் நல மன்றம் சார்பில், துவக்கத் தொகையாக 51 ஆயிரம் ரூபாய் தருவதாக, அதன் பொருளாளர் கே.எஸ்.டீ.முஹம்மது அஸ்லம் கூட்டத்தில் அறிவித்தார்.முன்னதாக தலைமைப் உறுப்பில் இருந்த ரியாத் காயல் நல மன்றம் சார்பாக துவக்கத் தொகையாக ரூபாய் 50,000 ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது குறித்தும் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

 

இக்ராஃவின் துவக்கத்திற்குக் காரணமான சிலருள் ஒருவரும், துவக்கம் முதல் இன்றளவும் அதன் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து சேவையாற்றி வரும் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் காயல்பட்டினத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார்.

 

இதற்காக அவரைப் பாராட்டி, இக்ராஃ பொதுக்குழு சார்பில் இக்ராஃவின் துணைத் தலைவரும், கூட்டத்தலைவருமான அல்ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூது இத்ரீஸ் அவர்களால் சால்வை அணிவித்து கண்ணிப்படுத்தப்பட்டது.

 

அவரது தேர்வைப் பாராட்டியும், வரும் ஐந்தாண்டு கால சேவைகள் சிறக்க வாழ்த்தியும், ஜித்தா காயல் நல மன்ற பிரதிநிதி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் உள்ளிட்ட பலரும் வாழ்த்திப் பிரார்த்தித்துப் பேசினர்.

 

 

கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

 

தீர்மானம் 01 – வரவு செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:

 

இக்ராஃ பொருளாளரால் நடப்பு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2015-16ஆம் ஆண்டிற்கான ஓராண்டு வரவு-செலவு கணக்கறிக்கைக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.

 

தீர்மானம் 02 – நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல்:

 

கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, 2016-17 பருவத்திற்கான நிதிநிலை அறிக்கைக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.

 

தீர்மானம் 03 – உறுப்பினர் சந்தாவை வசூலிக்க பொறுப்பாளர் நியமனம்:

 

இக்ராஃவின் உறுப்பினர் வருடாந்திர சந்தா தொகையை நிலுவையின்றி – குறித்த நேரத்தில் வசூலிப்பதற்காக, 10 சதவிகித கமிஷன் அடிப்படையில் வசூலிப்பாளர் ஒருவரை நியமிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

 

தீர்மானம் 04 – மூன்று ஆண்டுகள் உறுப்பினர் சந்தா செலுத்தாதோர் பெயர் நீக்கம்:

 

இக்ராஃ கல்விச் சங்கத்தில் உறுப்பினராக இருந்து, தொடர்ந்து 3 ஆண்டுகளாக தம் சந்தாத் தொகைகளை வழங்காதோருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பவும், அதன் பிறகும் சந்தா பெறப்படவில்லையெனில், கடிதம் அனுப்பப்பட்டதிலிருந்து 6 மாதத்தில் அவரை உறுப்பினர் தகுதியிலிருந்து விடுவிக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

 

தீர்மானம் 05 – கல்வி உதவித்தொகை அனுசரணையாளர்களுக்கு நன்றி:

 

இக்ராஃவின் பொது கல்வி உதவித்தொகை, ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகை ஆகிய திட்டங்களுக்கு தாராள நன்கொடைகளை வழங்கிய காயல் நல மன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அனுசரணையாளர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

தீர்மானம் 06 – கல்வி நிகழ்ச்சிகளை இணைந்து நடத்திய கா.ந.மன்றங்களுக்கு நன்றி:

 

காயல்பட்டினம் நகர மாணவ சமுதாயத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன், இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து கடந்தாண்டில் பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளை நடத்திய உலக காயல் நல மன்றங்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

தீர்மானம் 07 – புதிய உறுப்பினர்களுக்கு ஒப்புதல்:

 

இக்ராஃவில் உறுப்பினராவதற்கு விருப்பம் தெரிவித்த 21 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதன் அடிப்படையில், அவர்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.

 

தீர்மானம் 08 – செயற்குழுவின் பொறுப்புக்காலம் குறைப்பு:

 

தேர்ந்தெடுக்கப்படும் – இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழு 3 ஆண்டுகள் பொறுப்பில் இருக்கும் என்ற விதிமுறை மாற்றியமைக்கப்பட்டு, இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய செயற்குழு முதல் இனி வருங்காலங்களில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய செயற்குழுக்கள் அனைத்திற்கான பொறுப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக இக்கூட்டம் நிர்ணயித்து தீர்மானிக்கிறது.

 

தீர்மானம் 09 – செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:

 

நடப்பு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய செயற்குழு முதல் இனி வருங்காலங்களில், இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு 5 துணைத்தலைவர்கள் என்பதை மாற்றி, 6 துணைத் தலைவர்களை வைத்துக் கொள்வதற்கும், 25 செயற்குழு உறுப்பினர்கள் என்பதை மாற்றி, 26 செயற்குழு உறுப்பினர்களை வைத்துக் கொள்வதற்கும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

 

தீர்மானம் 10 – புதிய நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு:

 

இக்ராஃவின் புதிய நிர்வாகிகள் & செயற்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு இக்கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-

 

தலைவர்:

எம்.எம்.மொகுதூம் முஹம்மத்

 

துணைத்தலைவர்கள்:

 

(1) எஸ்.ஏ.அஹ்மத் ரஃபீக்

(2) வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்

(3) குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன்

(4) ஏ.எச்.முஹம்மத் நூஹ்

(5) எம்.என்.முஹம்மத் யூனுஸ்

(6) ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் இர்ஷாத் அலீ

 

செயலாளர்:

 

என்.எஸ்.இ.மஹ்மூது

 

துணைச் செயலாளர்கள்:

 

(1) ஏ.எம்.எம்.இஸ்மாஈல் நஜீப்

(2) எம்.எம்.ஷாஹுல் ஹமீத்

 

பொருளாளர்:

 

கே.எம்.டீ.சுலைமான்

 

செயற்குழு உறுப்பினர்கள்:

 

(01) டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்

(02) எஸ்.எச்.ஷெய்க் அப்துல் காதிர்

(03) வாவு எஸ்.அப்துல் கஃப்பார்

(04) பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி

(05) ஏ.ஆர்.முஹம்மத் இக்பால்

 

(06) டாக்டர் ஏ.முஹம்மத் இத்ரீஸ்

(07) ஏ.கே.கலீல்

(08) எம்.ஏ.எஸ்.ஜரூக்

(09) எம்.ஐ.மெஹர் அலீ

(10) மாஸ்டர் எம்.ஏ.புகாரீ

 

(11) வாவு எம்.எம்.உவைஸ்

(12) ஏ.எஸ்.அஷ்ரஃப்

(13) மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் ஆலிம்

(14) எஸ்.அப்துல் வாஹித்

(15) எல்.டீ.செய்யித் ஸித்தீக்

 

(16) எம்.இ.கைலானீ

(17) எஸ்.எம்.அஹ்மத் சுலைமான்

(18) ஹாஃபிழ் என்.டீ.ஸதக்கத்துல்லாஹ்

(19) எஸ்.எம்.எம்.டீ.ஷாஹுல் ஹமீத்

(20) கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ.

 

(21) கே.ஜெ.ஷாஹுல் ஹமீத்

(22) எஸ்.கே.ஸாலிஹ்

(23) எம்.ஏ.செய்யித் முஹம்மத்

(24) ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் முஜாஹித் அலீ

(25) கே.எம்.இ.முஹம்மத் தம்பி குளம்

 

(26) எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன்

 

 

தீர்மானம் 11 – முன்னாள் தலைமைக்கும் / நிர்வாகத்தினருக்கும் நன்றி:

 

இக்ராஃ கல்விச் சங்கத்தின் – கடந்த 2015-16 பருவத்திற்கான தலைமைப் பொறுப்பை ஏற்று, திறம்பட செயலாற்றிய கத்தர் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் / நடப்பு ஆலோசகர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அவர்களுக்கும், இக்ராஃவை வழிநடத்துவதில் அவருக்கு முழு ஒத்துழைப்பளித்த கத்தர் காயல் நல மன்ற நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.

 

அத்துடன் கடந்த காலங்களில் சிறப்பாக பங்களிப்பு செய்த இக்ராஃ செயலர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது அவர்களுக்கும்,இதர நிர்வாகிகள் , அங்கத்தினர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.

 

தீர்மானம் 12 – புதிய சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு:

 

 

இக்ராஃ கல்விச் சங்கம் துவக்கப்படுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தோருள் ஒருவரும், இக்ராஃவின் செயற்குழு உறுப்பினருமான – அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்கள், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், கடையநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம்,

 

காயல்பட்டினத்தின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர் எனும் தகுதியைப் பெற்றுள்ளமைக்காக அவரை இக்கூட்டம் உளமாரப் பாராட்டுவதுடன், அவரது 5 ஆண்டுகள் பொறுப்புக் காலத்தில் மக்கள் சேவையை அவர் நிறைவாகச் செய்து, அனைத்து சமய மக்களின் நன்மதிப்பையும் நிறைவாகப் பெற்றுய்ய இக்கூட்டம் வாழ்த்திப் பிரார்த்திக்கிறது.

 

இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

 

 

செயற்குழு உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நன்றி கூற, தாய்லாந்து காயல் நல மன்ற நிர்வாகிகளுள் ஒருவரான மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ. அபுல் ஹஸன் ஷாதுலீ ஆலிம் ஃபாஸீ துஆவைத் தொடர்ந்து, ஸலவாத் – கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் மதியம் 01:30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.

 

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே – அல்ஹம்துலில்லாஹ்!  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிலைப்படம் மற்றும் தகவல்: A.தர்வேஷ் முஹம்மது, நிர்வாகி, இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.