கடையநல்லூர் தொகுதி சட்டமன்றப் பேரவை உறுப்பினர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் K.A.M. முஹம்மது அபூபக்கர் அவர்கள் , 23-05-2016 திங்கட்கிழமை சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துக் கொண்டார் . அவருக்கு தற்காலிக சபாநாயகர் மாண்புமிகு செம்மலை அவர்கள், பதவி பிரமாணம் செய்து வைத்தார் .
சட்டமன்ற உறுப்பினர் காயல் மண்ணின் மைந்தர் , அல்ஹாஜ் K.A.M. முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு எதிர்கட்சிகளின் பகுதியில் முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்படத்தக்கது.
கடையநல்லூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக , இன்று முதல் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
சட்டமன்ற உறுப்பினரின் பணி சிறக்க மீண்டும் வாழ்த்துகிறோம்.
நிலைப்பட உதவி : முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைமை அலுவலகம்