நடைபெற்று முடிந்த 2016 சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், நமதூரைச் சார்ந்தவருமான சகோதரர் KAM அபூபக்கர் அவர்களை வாழ்,துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
சற்றொப்ப 35 ஆண்டுகளுக்கு முன்னரும், அதன்பிறகு, இரண்டாவது முறையாக 25 ஆண்டுகளுக்கு முன்னரும் வரவிருந்த இந்த வாய்ப்பு நமதூருக்கு வராமலே போயின.
நீண்ட வருடங்களுக்குப்பிறகு நமதூருக்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவும், சமுதாயத்திற்கு கிடைத்த சிறந்த பிரதிநிதித்துவமாகவும் இவருடைய வெற்றியை நாம் கருதுகிறோம். மேலும், நமதூரின் ‘முதல் சட்டமன்ற உறுப்பினர்’ என்ற சிறப்புப் பெயரையும் இவர் பெற்றிருப்பது இன்னும் மகிழ்ச்சியை தருகின்றது.
மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் KAM அபூபக்கர் அவர்கள், தம்மை தேர்ந்தெடுத்த கடையநல்லூர் தொகுதி மக்களுக்காகவும், நமதூர் மக்களுக்காகவும், சிறுபான்மை சமூக மக்களுக்காகவும் சட்டமன்றத்தில் உரிமைக்குரல் எழுப்பவும், இறைவன் அளித்த இந்த அமானிதப் பொறுப்பை தம்முடைய பதவிக்காலங்களில் செவ்வனே நிறைவேற்றவும் வல்லோனாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.
– JSA புஹாரி, தலைவர், துபாய் காயல் நல மன்றம்
தகவல்: Yahya Mohiadeen