அமீரகத்தலைநகர் அபுதாபி காயல் நல மன்றத்தின் ஒன்பதாவது செயற்குழு கூட்டம் 14 – 12 – 2012 அன்று மாலை மன்றத்தின் துணைச்செயலாளர் ஆர்கிடெக்ட் ஹபீப் ரஹ்மான் தலைமையில் செயற்குழு உறுப்பினர் ஜனாப் DR. செய்து அகமது அவர்களின் இல்லத்தில் வைத்து கூடியது.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் F.சாகுல் ஹமீது அவர்கள் இறைமறை கிராத் ஓத கூட்டம் துவங்கியது.
இக்கூட்டத்தின் தலைவர் அவர்கள், கடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழுவின் தீர்மானங்கள் பற்றியும், வருங்காலங்களில் செய்யவேண்டிய திட்டங்களை பற்றியும் விபரமாக விவரித்தார்.
மருத்துவ கையேடு:
இதுவரை மருத்துவ கையேடு கிடைக்கப்பெறாத காயல் மாநகர பொதுமக்கள் காக்கும் கரங்களின் தலைவர் ஜனாப் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களை 9842365912 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு இக்கூட்டத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நன்றியுடன் கூடிய முழு ஆதரவு!
நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கு காரணமாகவும், அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாகவும் செயல்பட்டு வரும் DCW தொழிற்சாலையைக் கண்டித்து அண்மையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் நன்றி தெரிவிப்பதுடன் காயல் மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் திட்டங்களுக்கு முழுஆதரவு வழங்குவது என்று ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் வருகை!
காவலங்காவின் மூத்த உறுப்பினர் காரி A.T.அப்துல் காதர் ஹாஜியார் மற்றும் துபாய் காயல் நல மன்றத்தின் ஆலோசனைக்குழுவின் மூத்த உறுப்பினர் V.S.A. தாவூது ஹாஜியார் ஆகியோர்கள் சிறப்புவிருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.
அவர்கள், மன்றத்தின் செயல்பாடுகளை பாராட்டியதோடு, பொது சேவையினால் அல்லாஹ்விடம் நாம் பெறப்போகும் நற்கூலிகளைப் பற்றியும், அதனால் நாம் அடையும் மனநி றைவுப்பற்றியும் விவரித்து, பல ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 11 – 01 – 2013 ஆம் தேதியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் ஹாபிஃழ் M.A ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்ழரி அவர்கள் அறிவித் தார்.
மன்றத்தின் பொருளாளர் ஹாஃபிழ் S.M.B. ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ழரி அவர்களின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
அபுதாபி காயல்நலமன்ற பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
நிழற்பட உதவி: ஜனாப். P.M. ஹுசைன் நூர்தீன்.
நிகழ்ச்சி குறிப்பேடு: ஜனாப். A.R. ரிபாய்.
தகவல் உதவி: M.E. முகியதீன் அப்துல் காதிர், செய்தித் துறை பொறுப்பாளர், காயல் நல மன்றம், அபுதாபி.