காயல்பட்டினம், சதுக்கைத் தெருவில் உள்ள அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது. டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கான இம்முன்தடுப்பு முகாம் ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் 16-12-2012 அன்று இடம் பெற்றது.
காலை 9.00மணிக்கு துவங்கி நண்பகல் 2 மணிவரை இடம் பெற்ற இம்முகாமில் நிலவேம்பு கஷாய குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமிற்கு முன்னால் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சிக்கு நகர்மன்ற ஆணையர் திரு.அசோக் குமார் தலைமை தாங்கினார். ஹாஜி R.S. அப்துல்காதர் அவர்கள் முன்னாள் தலைவர் ஹாஜி V.S.S. முஹ்யித்தீன் தம்பி அவர்கள் மற்றும் மன்ற துணைத்தலைவர் பிரபு செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இறைமறை ஓதிய பின் தலைமையுரையை தொடந்து மன்ற உறுப்பினர் சித்த மருத்துவர் டாக்டர் S.M.N. செய்யது முஹியத்தீன் D.S.M அவர்கள் சித்த மருத்துவத்துவத்தின் சிறப்பு மற்றும் டெங்கு காய்ச்சலின் தன்மை பற்றியும் நிலவேம்புக் குடிநீர் பயன்பற்றியும் எடுத்துரைத்தார்.
முன்னதாக நேய் பதுகாப்பிற்காக இறைவனிடம் சிறப்பு பிரர்த்தனை (துவா)செய்யப்பட்டது சிறப்பு பிரர்த்தனையை கத்தீபு அஹ்மது அப்துல்காதர் ஆலிம் அவர்கள் நிகழ்த்தினார்.
இம்முகாமில் முதல் நாள் 3000க்கும் மேற்பட்டோரும், இரண்டாம் நாள் 7000 பேரும் பயன்பெற்றனர். முகாமிற்கு வரமுடியாதவர்களுக்கும் இப்பயனாளிகள் கஷாய குடிநீரை வாங்கிச் சென்றனர்.
இம்முகாமில் காயல்பட்டினம் நகர்மன்ற தலைவர் ஜனாபா.ஆபிதா அவர்கள் துணைத்தலைவர் ஜனாப்.முகைதீன் அவர்கள், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் மற்றும் ஊர்பிரமுகர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை மன்ற செயலர் முஹம்மது முஹியத்தீன் B.E. அவர்கள், துணைச் செயலர் வாவு K.A. சாகுல்ஹமீது B.Sc., PGDCA மற்றும் மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
சித்த மருத்துவர் S.M.N. செய்யிது முஹ்யித்தீன் D.S.M. அவர்கள் பிரதி ஞாயிறுதோறும் எமது அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தில் வைத்து சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளார்.
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் வராமல் தடுக்க முகாம் ஏற்பாடு செய்த, நகரில் நலப்பணியாற்றும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தினரை அகமுவந்து வாழ்த்துகிறோம்.
தகவல் உதவி : H.M. செய்யிதகமது, மன்ற செய்தி தொடர்பாளர்.
நிழற்படம் : முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com