காயல்பட்டினம், கே.வி.ஏ.டி. புஹாரி ஹாஜி நினைவு அறக்கட்டளையும், ஷிஃபா சிறப்பு மருத்துவமனையும் இணைந்து, மாபெரும் இலவச மருத்துவமுகாமை காயல்பட்டினத்தில் சிறப்பாக நடத்தினர்.
எல்.எஃப். ரோடு ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில், 18-12-2012 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இம்முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா ஷேக் பி.எஸ்.சி., பி.எட். தலைமை ஏற்றார்.
அல்ஹாபிழ் சாகிபு இறைமறை ஓதி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். டாக்டர் ஜஃபர் சாதிக் எம்.பி.பி.எஸ், ஹாஜி ஏ.ஆர். முஹம்மது இக்பால், ஹாஜி.ஆர்.எம். சேக்னா, ஹாஜி.எஸ்.ஏ. பீர்முகம்மது, காயல் எஸ். இ. அமானுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கே.வி.ஏ.டி. செய்தி தொடர்பாளர் மன்னர் ஏ.ஆர்.; பாதுல் அஸ்ஹாப் வரவேற்புரை நிகழ்த்த, அறக்கட்டளை நிறுவனர் கே.வி.ஏ.டி. ஹபீபு முஹம்மது பி.எஸ்.சி. முகாமை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திர சேகர் டி.எம்.இ., ஆறுமுகநேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் எஸ். ஷியாம் சுந்தர், ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்கள்.
நகர்மன்ற உறுப்பினர்கள் லுக்மான், ஜமால், அந்தோணி, ஜஹாங்கீர், சம்சுத்தீன், ஹைரிய்யா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தலைமையுரை, வாழ்த்துரைகளுக்குப் பின்னர், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும், நகர்மன்ற உறுப்பினருமாகிய கே.வி.ஏ.டி. முத்து ஹாஜரா நன்றியுரை நிகழ்த்த துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நிகழ்ச்சியினை ஆசிரியர் அரிமா எம். அப்துர் ரஜாக் எம்.ஏ. பி.எட். நெறிப்படுத்தினார்.
முகாம்:
• இம்முகாமில் வாசன் கண் மருத்துவமனையின் சார்பில், கண் பரிசோதனை நடைபெற்றதில் 280 பேர் பயன் பெற்றனர்.
• டாக்டர் சந்தான கிருஷ்ண குமார் எம்.எஸ்.(இ.என்.டி.) சிகிச்சையில், காது, மூக்கு, தொண்டை பிரிவில் 85 பேர் பயன் பெற்றனர்.
• குழந்தைகள் நலம் மற்றும் நெஞ்சக நோய் நிபுணர் டாக்டர் சரவணன் எம்.பி.பி.எஸ்., டி.சி.ஹைச். சிகிச்சையில் 60 பேர் பயன் பெற்றனர்.
• தோல் நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் ஐயம்பெருமாள் எம்.பி.பி.எஸ், டி.டி. மற்றும் டாக்டர் கலையரசி ஆகியோர் சிகிச்சையில் 150 பேர் பயன் பெற்றனர்.
• சர்க்கரை மற்றும் கணயம் பிரிவில் டாக்டர் தாமஸ் கிங்க்ஸ்லி எம்.டி., டி.டி.சி.டி. சிகிச்சையில் 70 பேர் பயன் பெற்றனர்.
• மனநல மருத்துவர் டாக்டர் சிவசைலம் எம்.பி.பி.எஸ், டி.என்.டி. சிகிச்சையில் 25பேர் பயன் பெற்றனர்.
• பல் மருத்துவர் ரவிசங்கர் பி.டி.எஸ் சிகிச்சையில் 60 பேர் பயன் பெற்றனர்.
• பொதுமருத்துவபிரிவில் டாக்டர் சுரேஷ் மில்லர் சிகிச்சையில் 30பேர் பயன் பெற்றனர்.
• பிஸியோ தெரபிஸ்ட் டாக்டர் ரெனட் ஜோயல் பி.பி.டி., எம்.பி.டி. சிகிச்சையில் 42பேர் பயன் பெற்றனர்.
• 120 நபர்களுக்கு இரத்தப்பரிசோதனையும், 75 நபர்களுக்கு சர்க்கரை நோய் கண்டறிதலும், 120 நபர்களுக்கு இரத்தவகை கண்டறிதல் பரிசோதனையும், 75 நபர்களுக்கு யூரிக் ஆசிட் பரிசோதனையும் 40 நபர்களுக்கு நுரையீரல் (பி.எஃப்.டி.) பரிசோதனையும் செய்யப்பட்டது.
பரிசோதனை, நோய் கண்டறிதல் உள்ளிட்ட அனைத்தும் இம்முகாமில் இலவசமாகவே இடம்பெற்றன.
இந்த அறக்கட்டளையின் மூலம், விரைவில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை(Multi Speciality Hospital) நமதூர் குறுக்குச் சாலையில் (Bypass Road), அமைய விருப்பதாக, அதன் நிறுவனர் தனது அறிமுக உரையில் தெரிவித்தார்.
இலவசமுகாமுக்கு ஊர் மக்கள் சார்பில் நன்றியும், பணி தொடர வாழ்த்துகளும்.
நிழற்படம் மற்றும் தகவல் உதவி: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com