காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத் தலைவர் S.M. முஹைதீன் தலைமையில் 27-07-2015 அன்று , மன்ற வேண்டுகோள் கூட்டம் நடைபெற்றது.
அதில் , நகரில் மிகவும் பழுதடைந்து உள்ள 43 சாலைகளைப் புதிப்பிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 16 உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தை அறிந்த நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், இன்று நண்பகல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நகர்மன்றத் தலைவர் ஆபிதா சேக் இக்கூட்டத் தீர்மானத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, 43 சாலைகளைப் புதிதாகப் போடவிடாமல் இடைக்கால தடையாணையைப் பெற்றுள்ளார் .
நகராட்சி அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கே வராமல், அவர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் எவரும் மறுப்பு வாதம் செய்ய வாய்ப்பில்லாத சூழ்நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தடையானையால் விடிவுக் காலம் பிறந்த 43 சாலைகளின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் இந்த ஆட்சியில் மொத்தம் 33 இடங்களில் பயோ கேஸ் திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் , 32 இடங்களில் இத்திட்டம் அமுலுக்கு வந்து விட்டதாகவும் , நடைமுறைக்கு வராமல் இழுபறியில் உள்ள ஒரே இடம் காயல்பட்டினம் தான் என்றும் அதிகாரிகளின் மத்தியில் கூறப்படுகிறது.
பசுமைத் தீர்ப்பாயத்தில் பயோ கேஸ் திட்டத்திற்கு எதிரான வழக்கை தொடரச் செய்து , இடைக்கால தடையாணையைப் பெறச்செய்து, அத்திட்டத்தை முடக்குவதற்கு உண்டான அனைத்து பணிகளையும் நகர்மன்றத் தலைவர் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்த உண்மை.
அண்மையில், அவர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த வாக்கு மூலத்தில், தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் முகத் துவாரத்தில் பயோகேஸ் திட்டம் அமைவதாக குறிப்பிட்டிருப்பது எந்த அளவு உண்மை என்பதை அவரது மனசாட்சி அறியும் .
இப்படிப் பட்ட ஊருக்கு கேடு விளைவிக்கும் காரியங்களை, தவறான வழிக்காட்டிகளின் துணையோடு செய்து வரும் நகர்மன்றத் தலைவர், இப்போது 43 சாலைகளை புதுப்பிக்க விடாமல், தன்னுடைய தன்முனைப்பு (Ego )உணர்வை முன்னிலைப் படுத்தி , இந்த புண்ணியக் காரியத்தை (?) செய்து இருக்கிறார்.
பதவி முடிவதற்குள் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.
========================================================================================================
தடையானைப் பெறுவதற்கு உயர் நீதி மன்றத்தில் காயல் நகர்மன்றத் தலைவரால் தாக்கல்
செய்யப்பட வாக்குமூலம் -Affidavit
===========================================================================================
முந்தைய செய்திகள் :
இச்செய்தியோடு தொடர்புடைய முந்தைய இரு செய்திகளைக் காண இணைப்புகளின் மேல் அழுத்தவும்
http://www.kayalconnection.
http://www.kayalconnection.
தகவல் : நகராட்சி வட்டாரங்கள்