காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் அமைந்திருப்பது டி.சி.டபிள்யு. தொழிற்சாலை. இந்த ஆலையிலிருந்து வெளியாகும் அமிலக் கழிவுநீர் பல்லாண்டுகளாக காயலின் கடலில் கலக்கப்படுவதாக தெரியவருகிறது.
இதனால் கடல்மாசுபடுகிறது. அதன்மூலம் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதால் அதை உணவாக உட்கொள்ளும் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் அந்த ஆலையிலிருந்து சில நேரங்களில் வெளிப்படும் நச்சுப் புகை காற்றில் கலந்து சுவாசத்தில் இணைந்து பல்வேறு கொடிய நோய்கள் உருவாக காரணமாகி விடுகிறது.
அரசு விதிமுறைகளுக்கு எதிராக இந்த ஆலை செயல்படுவதைக் கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் வரும் 29ம் தேதி முழுஅடைப்பும், மாலை கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பை காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு(KEPA) விடுத்துள்ளது.
விதிமுறைகளை மீறும் ஆலைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள குடியரசுத் தலைவர் மற்றும் பிரதம அமைச்சருக்கு விரைவுச் செய்தி (தந்தி) அனுப்புமாறும் இவ்வியக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தகவல் உதவி:
November 26th, 2012