செவ்வாய் கிழமை இலவச மருத்துவ முகாம்
கே.வி.ஏ.டி. அரக்கட்டளை நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் 18.12.2012 செவ்வாய் கிழமை நடைபெறுகிறது. எல்.எஃப். ரோடு ஷிஃபா சிறப்பு மருத்தவமனை வளாகத்தில் நடைபெறும் இம்முகாமில் 13 மருத்துவர்கள் பங்கேற்கிறார்கள்.
அனைத்து நோய்களையும் கண்டறிந்து, சிகில்சை அளிக்கப்படும் இம்மருத்துவ முகாமில், இரத்தப் பரிசோதனை, சர்கரை நோய் பரிசோதனைப் போன்ற 10க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.
முகாமிற்கு முன்னதாக இடம்பெறும் துவக்க நிகழ்ச்சிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்கள் தலைமை ஏற்கிறார்.
திருச்செந்தூர் மோட்டார் வாகண ஆய்வாளர் திரு. சுந்திரசேகர் D.M.E., மற்றும் ஆறுமுகநேரி காவல் துறை உதவி ஆய்வாளர் திரு.எஸ். ஷியாம்சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்கள்.
பிரசுரங்கள் வாயிலாகவும், தானியங்கியங்கியில் ஒலி பெருக்கி (Auto Speaker) மூலமாகவும் இம்முகாம் பற்றி விளம்பரப் படுத்தப்பட்டு வருகிறது. முன்பதிவுக்கு 8 இடங்களை அறிவித்துள்ளனர்.
விரிவான செய்திகள் முகாமிற்குப் பின்னர் வெளியிடப்படும். முகாம் சிறந்து மக்கள் நலம் பெற வாழ்த்துக்கள்.
மண்மலை தாண்டும் சிற்றுந்து (Car)
நமதூர் தெரு ஒன்றில் மண்மலையோடு மல்லுக்கட்டும் சிற்றுந்தை இங்கு பார்க்கிறீர்கள். (16.12.2012) சிறிய இடைவெளியாவது, பெரிய மனதோடு விட்டு வைத்துள்ளார்களே என்றும் சொல்லத் தோன்றுகிறது வாழ்க சாலை வசதி பேணும் பொதுநல அக்கறை!
காமடி செய்றாங்கோ
இது நமதூரில் வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரம். மிஞ்சி வளியுதா மின்சாரம்? தேவைக்கே மின்சாரமில்லை. இதில் சிக்கனம் பிடிக்கக் கெஞ்சுறாங்க. கவலை மறந்து சிரிங்க. காமடி பண்றாங்க.
சிறுவர்களை நினைத்தாலே பதறுது
இது என்ன தெரியுதா? நமதூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு எதிரில் உள்ள ஒளியூட்டும் உயர்கம்ப விளக்குகள்
இது என்ன தெரியுதா? அந்த மின்கம்பத்தின் அடிப்பாகம். 20 நாளைக்கு முன்னால ஒரு மாட்டு மேலே வயர் பட்டு பரிதாபமா அது மாண்டு போச்சு.
பழுது பார்க்க நகர்மன்றம் தீர்மானம் போட்டு 17 நாளாச்சு. தடுப்பு ஒன்னு வச்சிருந்தாங்க. அதை இப்ப நீக்கி டேப்பு சுத்திட்டு போயிட்டாங்க.
நிரந்தர தீர்வு எப்போது? நகராட்சியில் கேட்டா E.B.யையும், அங்கே கேட்டால் நகராட்சியையும் கை காட்டுறாங்க. மாடு அதுவே பாவந்தான். விபரமறியாத சிறுவர்கள்! நினைத்தாலே பதறுது….
கனிகளின் கண்காட்சி
இந்தக் கண்காட்சி வேறெங்கும் நடைபெறவில்லை. நம்மூரில்தான் அதுவும் பைபாஸ் ரோடு ஆரம்பத்தில், நடைபாதையில், தள்ளு வண்டியில் வியாபாரம் செய்யும் ஒருவர் கடையில் இடம் பெற்றிருந்தது. நம்முடைய கேமராவுக்குள் வந்ததைத் தந்திருக்கிறோம்.
நிழற்படம் மற்றும் தகவல் தொகுப்பு : முதன்மைச் செய்தி முகவர் kayalconnection.com