காயல்பட்டினம் காட்டுத்தைக்காத்தெரு, அரூஸிய்யாப் பள்ளி அருகில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், உள்ளடங்கிய கல்வி விளையாட்டு விழா 13-12-2012 அன்று நடைபெற்றது.
இவ்விளையாட்டு நிகழ்ச்சிக்கு கிராமக் கல்விக்குழுத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமாகிய லயன் ஹாஜி எஸ்.ஏ.சாமுசிகாப்தீன் தலைமை தாங்கினார்.
நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ. அஜ்வாஜ் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கான ஒரு மாத கணிணிப் பயிற்சியின் நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
இவ்விழாவில் இப்பள்ளி மற்றும் தீவுத் தெரு ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி, ஓடக்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி, இரத்தினபுரி அருள்ராஜ் துவக்கப்பள்ளி, காயல்பட்டினத்தைச் சார்ந்த எல்.கே. துவக்கப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மேநிலைப் பள்ளி ஆகியவை பங்கேற்றன.
சிறப்பு ஆசிரியர் செந்தூர் கனி, ஆசிரியர் பயிற்றுனர் திருமதி. ரமா ஆகியோர் இப்போட்டியை சிறப்பாக நடத்தினர்.
இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை ஆசிரியை திருமதி செ. புனிதா செய்திருந்தார்.