தி.நகர் எல் கே எஸ் குழுமத்தின் புதிய நிறுவனமான T Nagar L K S GOLD MART எனும் புதிய நகைக் கடை சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ளது .
இதன் திறப்பு விழா 18-04-2015 சனிக்கிழமை அன்று காலை நடைபெற்றது . திருமிகு நாதெள்ள ரங்கநாத குப்தா இந்நிறுவனத்தை திறந்து வைத்தார். முதல் விற்பனையை தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் செயலாளர் ஹாஜி எச் . முஹம்மது அப்சல் தொடங்கி வைக்க , தமிழ்நாடு அரிசி ஆலை சம்மேளனத் தலைவர் டி .துளசிங்கம் பெற்றுக் கொண்டார்.
தாம்பரத்தில் உள்ள, ஜெய்கோபால் கரோடியா பள்ளிகளின் தலைவர் டி. நாராயண ராவ் வெள்ளிப் பொருட்கள் விற்பனைப் பிரிவையும், இந்து மிஷன் மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் டி.கே.சீனிவாசன் சேமிப்புத் திட்டத்தையும் துவக்கி வைத்தனர்.
முன்னதாக எல் .கே .எஸ். நிறுவன அதிபர்கள் ஹாஜி எஸ் . செய்து அஹமது, ஹாஜி எஸ் . அக்பர்ஷா ,எஸ்.ஏ. சுலைமான் , எஸ்.ஏ சர்ப்ராஸ் , ஏ.எஸ் அபூபக்கர் ஆகியோர் திறப்பு விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றனர் .
அழைப்பாளர்களும் , வாடிக்கையாளர்களும் திரளாக இத்திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
தகவல் உதவி : மக்கள் குரல் நாளிதழ் , சென்னைப் பதிப்பு , 19-04-2015