ஹாங்காங் ஐக்கிய பேரவை சார்பில் மே 3 அன்று இன்ப சுற்றுலா – முன் பதிவு செய்ய வேண்டுகோள்!
காயல்பட்டினம் ஐக்கிய பேரவை – ஹாங்காங் சார்பில், மே மாதம் 3ம் நாளன்று ஒருநாள் இன்பச் சுற்றுலா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் செயலாளர். எம்.செய்யது அஹமது வெளியிட்டுள்ள விபர அறிக்கை:
அன்பிற்குரிய ஹாங்காங் மற்றும் சீனா வாழ் காயல் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது ஹாங்காங் காயல்பட்டினம் ஐக்கிய பேரவையிலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருநாள் ”இன்பச் சுற்றுலா” இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 3 மே 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று Po Leung Kuk Jockey Club Day Camp Centre, Tai Tong, Yuen longற்கு சென்று வர திட்டமிடப்பட்டுள்ளது.
புறப்படும் இடம் : TSIM SHA TSUI, LOCK ROAD
புறப்படும் நேரம் : 8:00 மணி
கட்டண விவரம் :-
போக்குவரத்து மற்றும் நுழைவு கட்டணம் :
பெரியவர் : HK$ 100 ; குழந்தைகள் ( 3 -11 வயது) : HK$ 70
மதிய உணவு தேவைப்படுபவர்கள் HK$ 50 கட்டணத்தில் கோழி பிரியாணி / மீன் பிரியாணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சிற்றுலா தளத்தில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற பல பொழுது போக்கு மற்றும் விளையாட்டு சார்ந்த வளாகங்கள் இருக்கின்றன.
அவற்றில் சில :- நீச்சல் குளம், அம்பு ஏய்தல், கால்பந்து திடல், கூடைப்பந்து திடல், டென்னிஸ் பந்தாட்டத்திடல், சைக்கிள் திடல், உள்ளரங்கு, சுவர் ஏறுதல், ரோல்லர் ஸ்கேட்டிங், பூப்பந்து திடல், ஸ்குவாஸ் திடல், குழந்தைகள் விளையாட்டு திடல், பட்டம் பறக்கவிடும் திடல், சூட்டுக்கறி குழி மற்றும் பல…
நிகழ்ச்சியின் போது கவரத்தக்க வகையிலான அதிர்ஷ்ட குலுக்கலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய சிற்றுலாவில் இடம் பெற்ற அதிர்ஷ்ட குலுக்கலுக்கு மேலாக அதிக எண்ணிக்கையிலும், அதிக மதிப்பிலுமான பரிசுகள் காத்திருக்கின்றன.
ஹாங்காங் மற்றும் சீனாவில் வாழும் காயலர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு உறவுகளை வலுப்படுத்தவும், அதன் பயனாக நமதூர் வாசிகளிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி தேவைப்படுவோருக்கு இணைந்து உதவிடவுமே குடும்ப சகிதமாக சென்றுவர இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
எனவே ஹாங்காங் மற்றும் சீனா வாழ் காயலர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்களிடம் தங்களின் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் பெயர்களை பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எம்.எம்.எஸ். சேக் மொகுதூம் – 96372595
எம். செய்யது அஹமது – 90808490
எம்.ஏ.கே. நூஹு பஸீர் – 94794814
எஸ்.எம்.ஜே. முஹம்மது பாக்கர் – 60797474
எம்.ஏ.கே. அப்துல் பாசித் – 97734485
வி.எம்.டி. முஹம்மது ஹஸன் – 92624715
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: Kayalpatnam United Forum Hong Kong