காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் – உள்ளூர் அளவிலான – யுனைட்டெட் ஃபுட்பால் லீக் (UFL) கால்பந்து சுற்றுப்போட்டிகள், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான பொன்விழா சுற்றுப் போட்டிகளைத் தொடர்ந்து வரும் மே மாதம் 25ஆம் நாளன்று துவங்குகிறது.
கடந்தாண்டு 8 அணிகள் பங்கேற்றிருக்க, நடப்பாண்டு 10 அணிகள் பங்கேற்கும் வகையில் இச்சுற்றுப்போட்டி வடிவமைக்கப் பட்டுள்ளது. பங்கேற்கும் அணிகள், அவற்றின் உரிமையாளர்கள், அணிகளுக்கான உடை (ஜெர்ஸி) நிறங்கள் நிர்ணயிக்கப் பட்டு, சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது.
இச்சுற்றுப்போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், ஐக்கிய விளையாட்டு சங்க அலுவலகம், கலாமீஸ் குலோத்திங் நிறுவனம் ஆகிய இடங்களில் விண்ணப்பப் படிவங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், மேலதிக விபரங்களுக்கு, சுற்றுப்போட்டிக் குழுவின் தகவல் தொடர்பாளரான ஏ.எஸ்.புகாரீயை,+91 96001 83570 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: எஸ்.கே.ஸாலிஹ் மூலமாக A.S.புகாரீ