சென்னையில் குழந்தைநல மருத்துவராக பணியாற்றிவரும் டாக்டர் D. முஹம்மது கிஸார் M.B.B.S.,D.C.H. சென்னைவாழ் காயல் மருத்துவர்கள் ஒன்று கூடும் கூட்டத்திற்கு விடுத்துள்ள அழைப்பு பின்வருமாறு:
காயல்பட்டினத்தைச் சொந்த ஊராக கொண்டு, சென்னையில் பணிபுரியும் டாக்டர்கள் கவனத்திற்கு..
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் ….
வேலைப் பளு மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக, நமதூரைச் சேர்ந்த மருத்துவர்கள், இதுவரை நமக்குள் தொடர்பு அதிகம் இல்லாமல், பரஸ்பரம் புரிந்துணர்வு அதிகம் இல்லாமல் இருந்து வருகிறோம்..
முன்னர் இந்திய மருத்துவ சங்கம் அல்லது தத்தம் speciality இன் மருத்துவ கூட்டம் அல்லது மற்ற மருத்துவ மாநாடுகளில், வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ சந்திக்கும் வாய்ப்புப் பெற்றோம்.
ஆனால் சில ஆண்டுகளாக நாம் அந்த கூட்டங்களிலும் கலந்து கொள்வதை குறைத்துக் கொண்டதால், நமக்குள் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.
இதைக் கருத்தில் கொண்டு, இனி நாம் குறைந்தது மாதம் ஒரு முறை ஒன்று கூடி பேசுவது பற்றி ஆலோசிக்க, வருகிற 23-12-2012ம் தேதி, சென்னை மண்ணடியில் உள்ள highness hotel ல் வைத்து மதியம் 2 முதல் 4 மணி வரை கலந்து ஆலோசிப்பது என்று முடிவு எடுத்துள்ளோம்.
நமதூரை சார்ந்த பொது மற்றும் பல் மருத்துவர்கள் இதையே அழைப்பாக ஏற்றுக் கொண்டு வருகைதருமாறு கேட்டுகொள்கிறேன்.
இதை படிக்கும் காயல் அன்பர்கள், தங்களுக்கு தெரிந்த, சென்னைவாழ் நமதூர் மருத்துவர்களிடம் இந்த செய்தியை எடுத்துரைக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
இது தொடர்பாக, மேலும் விபரம் அறிய என்னையோ ( 9444114664) அல்லது டாக்டர் நவாஸ் அவர்களையோ ( 9840031470 ) அல்லது டாக்டர் நயினா ( 9382663236 ) அவர்களையோ தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்..
இவ்வாறு டாக்டர் D. முஹம்மது கிஸார் தனது வேண்டுகோள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் சென்னையில் ஒன்றுகூடும் காயல் மருத்துவர்களின் முடிவுகளால் நமதூருக்கு நன்மை விளையட்டும்.