காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 14.12.2012 அன்று காலை 10.00 மணி அளவில் ஆளுமைத்திறன் ( Personality Development ) குறித்துக் கருத்தரங்கம் நடைபெற்றது.
வணிக நிர்வாகவியல் துறைத் தலைவி S.A. ரஹ்மத் ஆமினா பேகம் M.B.A., M.Phil., M.B.A.( HRM ) வரவேற்புரை நிகழ்த்தினார்.
கல்லூரி முதல்வர் முனைவர். திருமதி. வே. சசிகலா M.A., M.Phil., Ph.D., அறிமுக உரை நிகழ்த்தினார்.
பாளையங்கோட்டை தூய. சேவியர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொருளியல் துறைத்தலைவர் முனைவர் S.V.L. மைக்கேல், கருத்தரங்கில் தலைமை தாங்கி ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ளும் திறன் குறித்து மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார்.
இரண்டாம் ஆண்டு வணிகநிர்வாகவியல்துறை மாணவி ம. மிஸ்பா யாஸ்மின் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது.
தகவல்உதவி : கல்லூரி நிர்வாகம்