காயல்பட்டினம் நகரமன்ற நிகழ்ச்சி
காயல்பட்டினம் நகரமன்றத்தில் இந்திய விடுதலை நாள் விழா நடைபெற்றது. இ ந் நிகழ்ச்சிக்கு நகரமன்றத்தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை ஏற்று தேசிய கொடியை ஏற்றி, ஒருமைபாட்டு உறுதிமொழியை முன்மொழிந்தார்.நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் அனைவரையும் வரவேற்றார்.
நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெ.அந்தோணி, கே.ஜமால், நகரப் பிரமுகர் ஏ.எஸ்.ஜமால் முஹம்மது மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில், நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நகராட்சி மூலம் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றவர்களுக்கு இவ்விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைவாக நகராட்சி அலுவலர் நிஸார் நன்றி உரை நிகழ்த்தினார்.
நிலைப்படம் : kayalconnection க்காக FAIL STUDIO
…………………………………………………………………………………………………………………………………………………………
முஸ்லிம் லீக் நடத்திய விடுதலை நாள் விழா
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழா குறித்து, அக்கட்சி வெளியிட்டுள்ள தகவல்.
இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இம்மாதம் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் சுதந்திர தின விழா, காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
கட்சியின் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தேசிய கொடியேற்ற, கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற அரங்க நிகழ்ச்சியில், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நகர தலைவர் தலைமையுரையாற்றினார். நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், மனித நேயம் ஆகியவற்றை வலியுறுத்தி கட்சியின் மூத்த நிர்வாகி எஸ்.எஸ்.இ.காழீ அலாவுத்தீன் ஆலிம் இறைப்பிரார்த்தனை செய்தார்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், இளைஞரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், நகர நிர்வாகிகளான எம்.கே.முஹம்மத் அலீ, எம்.இசட்.ஸித்தீக், அரபி ஷாஹுல் ஹமீத், முன்னாள் பொருளாளர் எம்.எம்.அஹ்மத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தகவல் : எஸ்.கே.ஸாலிஹ்
நிலைப்படம் : A.R.ஷேக் முஹம்மது
………………………………………………………………………………………………………………………………………………………..
மகளிர் கல்லூரியில் விடுதலை நாள் விழா
தகவல் : கல்லூரி நிர்வாகம்