காயல்பட்டிணம், குத்துக்கல் தெருவை சேர்ந்தவர் MJF. அரிமா.அல்ஹாஜ் எஸ்.எஸ்.எம்.சதகத்துல்லாஹ் அவர்கள் .
இவர் மறைந்த எம்.எஸ்.ஷேக் சம்சுதீன் மக்கி ஹாஜி அவர்களுடைய மகனும், கரூர் டிரேடர்ஸ் எஸ்.எம்.ஃபாஸி ஹாஜி அவர்களின் தாய் மாமா மகனும் ஆவார் .
மேலும் , இவர் , K.M.T. மருத்துவமனை அறங்காவலர்களில் ஒருவராகவும், ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும், காயல்பட்டிணம் ஹாம் ரேடியோ சங்கத்தின் செயலாளராகவும், L.K.S.கல்வி நிறுவனங்களில் உறுப்பினராகவும், சென்னை மயிலாப்பூர் அரிமா சங்கத்தின் உறுப்பினராகவும், மற்றும் பல பொது தொண்டு அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்து சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்
இந்நிலையில் இவர் , சென்னையில் மேதகு தமிழக ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா அவர்களால் பாராட்டு சான்றிதழுடன் கேடயமும் வழங்கி கௌரவிக்கப்படடுள்ளார்.
பல்வேறு துறையில் சாதனை புரிந்தோரை கவுரவிக்கும் முகமாக , சென்னை மகளிர் கிருத்துவ கல்லூரியில்,ஆங்கில நாளிதலான CHENNAI METRO சார்பாக நடந்த விருது வழங்கும் இவ்விழாவில் ’47 தடவை’ இரத்த தானம் செய்ததற்காக இச்சிறப்பு அவருக்கு வழங்கப்பட்டது .
உலகில் மிகக் குறைந்த அளவு மக்கள் பெற்றுள்ள அறிய வகை இரத்த பிரிவான A1B -ve இரத்த பிரிவை MJF. அரிமா. எஸ்.எஸ். எம். சதகத்துல்லாஹ் அவர்கள் பெற்றுள்ளது வியத்தகு தகவலாகும் .
ஆளுநர் மூலம் விருது பெற்ற காயலர் அரிமா சதகத்துல்லாஹ் அவர்களைப் பற்றி மேலும் தகவல் அறிய http://www.qsl.net/vu2sdu/
நிலைப்படம் மற்றும் தகவல் :சென்னையில் இருந்து R.Yousuf