காயல்பட்டினம் நகரம் 6 ஆவது மற்றும் 7 ஆவது வார்டுகளுக்குரிய குடும்ப அட்டை (ரேஷன்கார்டு)களில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கான முகாம் நெய்னார் தெரு சிறிய குத்பா பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ள மன்பவுல் பறகாத் சங்கத்தில் வைத்து நடைபெற்றது.
12-12-12 புதன் கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை இடம்பெற்ற இம்முகாமில் திருச்செந்தூர் வட்டார (காயல்பட்டினம் பகுதிக்கான) வட்டவழங்கல் அதிகாரி(T.S.O.) திரு. செல்வபிரசாத் மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த இப்பகுதிக்கான வருவாய் அதிகாரி (R.I.) திரு.க. சுப்பையா ஆகியோர் இம்முகாமில் பங்கேற்று பணியாற்றினர்.
நகர்மன்ற துணைத்தலைவர் ஜனாப். எஸ்.எம். முகைதீன் மற்றும் கவுன்சிலர்கள் எம். ஜஹாங்கீர், ஏ. லுக்மான், எஸ்.எம்.பி. பத்ருல் ஹக், ஏ.ஏ.அஜ்வாஜ், கே. ஜமால் ஆகியோர் அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருந்து முகாமின் நிறைவுவரை ஒத்துழைப்பு நல்கினர்.
காயல்பட்டினம் அரிமா சங்கத்தினர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்ஏ.கே.முகம்மது மெய்தீன் ஆகியோரின் அணுசரனையிலும், அ.இ.அ.தி.மு.க. சிறுபான்மைப் பிரிவு செயலாளர் ஜனாப். எம்.ஜே.செய்யிது இப்றாஹீம் மற்றும் நகர அம்மாப் பேரவை செயலாளர் ஏ. அன்வர் ஆகியோரின் முன்னேற்பாட்டிலும் இம்முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் அரிமா சங்கத்தைச் சேர்ந்த சேக்னா லெப்பை, வி.ஐ. புகாரி ஆகியோரும், காக்கும் கரங்கள் அமைப்பினரும் மற்றும் மன்பவுல் பறகாத் சங்கத்தினரும் இம்முகாம் சிறப்புடன் நடைபெற துணைபுரிந்தனர்.
நிழற்படம் & தகவல்: முதன்மைச் செய்தி முகவர், kayalconnection.com