சிங்கப்பூர் காயல்நலமன்றத்தின் (KWAS) செயற்குழு கூட்டம் 7-12-2012 வெள்ளிக்கிழமை அன்று KWAS அலுவலகத்தில் நிர்.100 சுல்தான் பிளாஸா சிங்கப்பூர் என்ற முகவரியில் மாலை 7.30 மணிக்கு நடைபெற்றது.
சாளை நவாஸ் தலைமை தாங்கினார். ஹாஜி பாளையம் முஹம்மது ஹஸன் இறைமறை ஓதி இக்கூட்டத்தை துவக்கி வைத்தார்.
தலைவர் உரையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பின் மூலமாக நமதூரில் நடைபெற்ற கடையடைப்பு பற்றியும், DCW ன் ரசாயன கழிவுகளை சட்டவிரோதமாக கடல் மற்றும் நீர்நிலைகளில் கலப்பது பற்றியும் விளக்கி சொன்னார்.
கூட்டத்தில் பங்கேற்ற பாளையம் முகம்மது ஹஸன், S.M.S.களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும் உறுப்பினர்களையும் ஆதரவாளரையும் பாராட்டி பேசினார். சென்ற மாத அறிக்கை தணிக்கை செய்தார். கேன்சர் புற்றுநோய் CEFFC கண்டுபிடிக்கும் கமிட்டி அமைப்பது பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.
அமைப்பாளர் M.A.C. செய்யிது இஸ்மாயீல் KWAS பற்றிய தற்போதைய செயல்பாடுகள் பற்றியும், அதன் முன்னேற்றம் பற்றியும் விளக்கமளித்தார். காயலின் ஏழைகளுக்கு தேவையான உதவிகள் செய்தல் மற்றும் முதியோர் இல்லம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இவைகளுக்கு ஆதரவை உறுப்பினர்களிடம் கோரினார்.
தலைவர் ரஷீத் ஜமான் ஆற்றிய சிறிய உரையில், அவர் துபாய் சென்று வந்ததையும், அங்கு அபுதாபியில் காயல் நலமன்ற கூட்டத்தில் பங்கு பெற்றதையும் விளக்கினார். வீட்டிற்குள்ளேயே நமது உறுப்பினர்கள் மருத்துவ சிகிச்சை எடுப்பது பற்றியும் குறிப்பிட்டார்.
ஊரில் சுற்றுப்புற சூழல் அமைப்பிலிருந்து வந்த கடிதத்தை சிங்கப்பூர் இந்தியன் ஹைகமிஷனுக்கு வழங்குதல், காயலின் பட்டதாரிகளுக்கு அவர்களின் திறமையைப் பொறுத்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பயிற்சி அளிக்கப்படும் ஏழை மாணவர்களுக்கு சென்னையிலேயே வேலை கிடைக்கும்படியாய் ஏற்பாடு செய்தல், அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்தல், மேற்படிப்புக்காக உதவி செய்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த பாளையம் ஹபீபு முஹம்மது, தனது உரையில் மாணவர்கள் கல்வி விபரப்பட்டியல் (STUDENTS PROGRESS DATA) கணக்கெடுக்கும்படியும், அதில் முன்னிலையில் உள்ள 10 பேர்களை தேர்ந்தெடுத்து உதவி செய்யும்படியும் வேண்டினார்.
மேலும், சங்க உறுப்பினர்கள் ஊருக்கு வரும்போது, ஊரில் உள்ள கல்விச் சாலைகளுக்கு சென்று மாணவர்களின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், வரும் காலத்தில் மலேசியா காயல் நலமன்ற உறுப்பினர்களையும் பொதுக்குழுவிற்கு அழைத்து உபசரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாளர் K.M.T. சேக்னாலெப்பை கணக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
2013 ஆண்டிற்குரிய KWAS பட்ஜெட் கமிட்டி, உறுப்பினர் ஜவ்ஹர் இஸ்மாயீல் தலைமையில் அமைக்கப்பட்டது. உறுப்பினர்கள் உமர் ரப்பானீ, செய்யிது இஸ்மாயீல் ஆகியோர் பட்ஜெட் உருவாக துணைபுரிவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த KWAS குடும்ப சந்திப்பு 2013 ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி கூடுவது என முடிவெடுக்கப்பட்டது.
பாளையம் ஹபீபு முஹம்மது, சென்னை அப்துல் லத்தீப், காயல்பட்டினம் ஹாபிஸ் முஹம்மது ஹஸன் (ஹாங்காக்) ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. ரூ 1,40,000 நிதி சேர்ந்திருந்தது.
நன்றியுரை துஆ பிரார்த்தனையுடன் நிறைவுற்றது. தொடர்ந்து விருந்து நடைபெற்றது.
தகவல் உதவி : Alhafiz. M.A.C. Seyed Ismail, Term Member, Executive Committee, KWAS.