இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநிலச்செயலாளரும், மணிச்சுடர் நாளிதழ் செய்தி ஆசிரியருமான காயல்மகபூப் தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கத்தின் சார்பில்,டிசம்பர் 6-ம்தேதி இஷாதொழுகைக்குப்பின் பேங்காக் பள்ளிவாசல் அரங்கில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கத்தின் தலைவர் வாவு எம்.எம்.சம்சுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,அல்ஹாபிழ் எம்.ஏ. ஷாதுலி ஆரிப்ஃபாஸி இறைமறை ஓதினார்.
சங்கச் செயலாளர் வடகரை ராஜா முகம்மது வரவேற்புரையாற்றினார். உலகத்தமிழ் பண்பாட்டுக் கழகத் தலைவர் டாக்டர் ரபீயுத்தீன்,பள்ளி இமாம்மௌலானா முஹ்யித்தீன்ஆலிம்பாகவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
‘மணிச்சுடர்’ நாளிதழ் வெள்ளிவிழா சிறப்பு மலரை தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கப் பொருளாளர் கீழக்கரை முஹம்மது முஃப்லிஹ் வெளியிட்டார்.
காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் நீடூர்நஸீம், காரைக்கால் தம்பிஷா மரைக்காயர், வடகரை அக்பர் அலி மற்றும் நீடூர் சிராஜுத்தீன், டாக்டர் நீடூர்ஹுமாயூன், பாண்டிச்சேரி கியாஸுத்தீன், காயல்பட்டினம் எம்.எஸ். செய்யது முஹம்மது, திருக்களாச்சேரி எம்.எஸ்.அஷ்ரப் ஆகியோர் மலரைப்பெற்றுக் கொண்டனர்.
மௌலானா ஐதுரூஸ்ஆலிம்துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
தகவல்உதவி: ஏ.எஸ்.இர்ஃபான், தாய்லாந்துகாயல் நலமன்றம்.