காயல்பட்டினத்தில் 05.01.2013 இன்று சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
சின்ன நெசவுத் தெரு தாயும் பள்ளிக்கு எதிரில் அமைந்துள்ள கேர் அண்ட் கியூர் மருத்துவமனையினர் இம்முகாமை நடத்தினர்.
குழந்தைகள் நலம் மற்றும் பல் சம்பந்தமான சிறப்பு சிகிச்சை முகாமாக இது அமைந்தது.
பிரபல பல் சிகிச்சை நிபுனர் , டாக்டர் முஹம்மது சுலைமான் B.D.S., சிகிச்கை அளித்தார்.
பிரபல குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், டாக்டர் எட்வின் M.B.B.S., DCH., குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தார்.
திரளான மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர். மருத்துவ முகாமுக்கான முன்பதிவு செய்யும் இடமாக, ஸபயர் மெடிக்கல்ஸ் செயல்பட்டது.
சகோதரர்கள் K. யூனுஸ், S.M. அப்துல் வஹாப், K.P. அன்வர், M.L. இப்றாஹிம், O.S. சாகுல் ஹமீது மற்றும் ஸபயர் மெடிக்கல் பணியாளர்கள் இம்முகாம் சிறப்புற பணியாற்றினர்.